Sunday, November 26, 2006

தொடரும்...

காலேஜில் எக்ஸாமும் கல்ச்சுரல்ஸ்ஸூம் ஒன்றாக வந்தது போல், சென்ற வாரம் முழுக்க அலுவலக வேலையும் நட்சத்திர வாரமும் ஒன்றாக வந்து திணரடித்துவிட்டன! மூன்று இரவுகள் விழித்திருக்கும்படியான வேலைக்கு நடுவில் பதிவுகள் இடுவதும் பின்னூட்டங்கள் வாசிப்பதும் நல்ல இளைப்பறல்களாக இருந்தது. ஆனாலும், நட்சத்திர வாரத்தில் எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்த அனைத்தையும் எழுத முடியாமற் போனது எனக்கு வருத்தம் தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தும், முன்னேற்பாடாய் எந்த பதிவையும் முழுமையாய் எழுதிவைத்துக்கொள்ளாதது என் தவறுதான். என்ன செய்ய? படிக்கும்போது எக்ஸாமுக்குக்கூட கடைசிநாள் உட்கார்ந்து படித்தே பழக்கம் எனக்கு. இன்னும் அந்தப் பழக்கம் மாறவில்லை என்பதைத் தெளிவாக உணரமுடிந்தது :)

தமிழ்மணத்தின் இந்த நட்சத்திர சேவையின் முழு வீச்சையும், நாம் நட்சத்திரமாக இருக்கும்போதுதான் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். இங்கு அதிக அறிமுகமில்லாத எனக்கு ஓரளவு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், தனிமடல் மூலம் தொடர்புகொண்ட(வலைப்பதிவர் அல்லாதவர்கள் உட்பட) சில நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது இந்த நட்சத்திர வாரம். சாதியம் பற்றிய பதிவில், கல்வெட்டு அவர்களுடனான விவாதம் பல புதிய சிந்தனைகளுக்கு வழிவகுத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பொதுவாய், நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வம் எழுந்திருக்கிறது. முன்பெல்லாம் வாரக்கணக்கில் எதுவும் எழுதாமல் இருப்பது போலல்லாமல், அடிக்கடி எழுதவேண்டும் என்ற உந்துதல் வந்திருக்கிறது. பார்க்கலாம்... :)

மற்றபடி, இந்த வாய்ப்பளித்த தமிழ்மணம், மதி அவர்கள், படித்து ஊக்கம் கொடுத்த அனைத்து நண்பர்கள் மற்றும் என் அலுவலகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், சென்ற வார நட்சத்திரமாயிருந்து என்னை வாழ்த்தி வரவேற்ற துளசியக்கா ஸ்டைலில், புதிதாய் வரவிருக்கும் நட்சத்திரத்திற்கு என் வாழ்த்துக்களைச் சொல்லி வரவேற்கிறேன் :)

தொடரும் உங்கள் ஆதரவை எதிர் நோக்கி,இன்னும் நான் பேச நினைத்த, நினைக்கும் அனைத்தும் இனிவரும் என் இடுகைகளில் தொடரும்...

நட்புடன்,
அருள்.

17 comments:

குழலி / Kuzhali said...

நான் எதிர்பார்த்த அளவிற்கு செய்யலைனாலும் ஓரளவிற்கு நல்லாதான் செய்த.... (நான் ஏன் எதிர்பார்த்தேன்னு உனக்கு நல்லா தெரியும்)

நன்றி

அருள் குமார் said...

//நான் ஏன் எதிர்பார்த்தேன்னு உனக்கு நல்லா தெரியும்//

தெரியுது தெரியுது... :))

- யெஸ்.பாலபாரதி said...

//நான் எதிர்பார்த்த அளவிற்கு செய்யலைனாலும் ஓரளவிற்கு நல்லாதான் செய்த.... //

விடுங்க தல.. அடுத்த மொறை அமையாமலா போகும்.. அப்ப அடிச்சு ஆடலாம். ;-))))

அருள் குமார் said...

//விடுங்க தல.. அடுத்த மொறை அமையாமலா போகும்.. அப்ப அடிச்சு ஆடலாம். ;-)))) //

ஓக்கேத்தல, நெக்ஸ்ட் மீட் பண்ணிக்கலாம் :)))

siva gnanamji(#18100882083107547329) said...

குழலிக்கு ரொம்ப மகிழ்ச்சிதான்,வாக்கு மீறாத நண்பரால்!

பரபரப்புப்பதிவுகள் இல்லை...
சிந்திக்கத் தூண்டும் பதிவுகள் உண்டே!

தனிப்பட்டமுறையில் உங்கள் திறமையை அறிதிருப்பதால்,
குழலியும் 'பாபா'வும் நிறைய எதிர்பார்த்திருக்கக்கூடும்....

நீங்கள் திருப்திகரமான நட்சத்திரம்தான்

G.Ragavan said...

அருள், இந்த வாரம் இனிய வாரமாகக் கழிந்திருக்கும் என்றே நம்புகிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

ஓரளவுக்கு என்றெல்லாம் சொல்ல மாட்டேன். சொல்ல வந்ததை நிறுத்தி நிதானமாகச் சரியாகச் சொல்லியிருந்தீர்கள் என்றே நினைக்கிறேன். சொல்வதற்கு எத்தனையோ கருத்துகள் இருக்கின்றன. இருப்பது ஒரு வாரம். ஆனாலும் இன்னமும் எழுதலாம். எந்தக் கருத்தைச் சொன்னாலும்....இதே போன்று நடுநிலையோடு நாகரீகமாகச் சொல்லுங்கள். உங்கள் மேல் அந்த எதிர்பார்ப்பு உண்டு.

அருள் குமார் said...

//குழலிக்கு ரொம்ப மகிழ்ச்சிதான்,வாக்கு மீறாத நண்பரால்!//

ஆமாம். தனிமடலில் கூட சொன்னார் :)

//நீங்கள் திருப்திகரமான நட்சத்திரம்தான் //

மிக்க நன்றி சிவஞானம்ஜி சார்!

நன்றி ராகவன்.

//இதே போன்று நடுநிலையோடு நாகரீகமாகச் சொல்லுங்கள். உங்கள் மேல் அந்த எதிர்பார்ப்பு உண்டு.//

நிச்சயம் இந்த எதிர்பார்ப்புக்கு பங்கம் வராது ராகவன் :)

G.Ragavan said...

// நிச்சயம் இந்த எதிர்பார்ப்புக்கு பங்கம் வராது ரகவன் :) //

சிரிச்சிக்கிட்டே என்னோட கால வெட்டீட்டீங்களே அருள் :-(((

அருள் குமார் said...

//சிரிச்சிக்கிட்டே என்னோட கால வெட்டீட்டீங்களே அருள் :-((( //

அதனால என்னங்க ராகவன். திரும்பவும் ஒட்ட வச்சிட்டா போச்சு...

இப்போ பாருங்க :)))

சேதுக்கரசி said...

//ஆனாலும், நட்சத்திர வாரத்தில் எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்த அனைத்தையும் எழுத முடியாமற் போனது எனக்கு வருத்தம் தான்.//

ஆனாலும் mild-ஆ, ஒரே சீராகப் போச்சுங்க போன வாரம்.. வாழ்த்துக்கள்.

அருள் குமார் said...

நன்றி சேதுக்கரசி :)

துளசி கோபால் said...

ஏங்க 'நட்சத்திரவாரம்' நல்லாதானெ போச்சு. அப்புறமும் ஏன் இப்படிச் சொல்லிட்டீங்க?

ஆனா ஒண்ணுங்க. நிறைய மனசுலெ வச்சுருப்போம். எழுத உக்கார்ந்தா, அந்த
நொடி ஒரு வெறுமை வந்துரும். இது அநேகமா எல்லாருக்கும் இருக்கறதுதான்.

'நடு செண்டர்'லே நிக்க வச்சுடறாங்க. அதான் இப்படி ஒரு திகைப்பு வந்துருது:-)))))

அருள் குமார் said...

//'நடு செண்டர்'லே நிக்க வச்சுடறாங்க. அதான் இப்படி ஒரு திகைப்பு வந்துருது:-))))) //

ஆமாங்க... நானும் இத யோசிச்சேன் :)

பொன்ஸ்~~Poorna said...

//'நடு செண்டர்'லே நிக்க வச்சுடறாங்க. அதான் இப்படி ஒரு திகைப்பு வந்துருது:-))))) //

ஆமாமாம்.. :(

அருள் குமார் said...

பொன்ஸ்,
நீங்க நியூயார்க் ஏர்போட்லயே தனியா போய் நடு சென்டர்ல நின்னவங்க. இதுக்கெல்லாம் பயப்படலாமா... சும்மா அடிச்சி ஆடுங்க ;)

Anonymous said...

நல்லா இருந்ததுங்க...ராகவன் சொன்னதுபோல, "இதே போன்று நடுநிலையோடு நாகரீகமாகச் சொல்லுங்கள். உங்கள் மேல் அந்த எதிர்பார்ப்பு உண்டு."..குறிப்பாக கடந்த வாரத்தில் அந்த எதிர்பார்பினை நன்றாக உருவாக்கியிருக்கிறீர்கள்....

பார்பனீய-பார்தீனிய அரசியல் நண்பர்களூக்கு இடையில் உங்களைப்போல் ஒருவர் இருப்பது அரிது....(அதிலும் அவர்கள், உங்களை, இந்த மாதிரி இருக்கவிட்டிருப்பது உங்களது தனித்துவதைக் காட்டுகிறது)

நிறைய எழுத, அரசியல்- சாதீயம் இன்றி வாழ்த்துக்கள்.

அருள் குமார் said...

உங்கள் மறுமொழி மிகுந்த ஊக்கமளிப்பதாய் இருக்கிறது. மிக்க நன்றி அனானி!