சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த கவிதை இது...
"ஸ்கூட்டர்களுக்காகவும்
பிரிட்ஜிக்காகவும்
அலுவலகம் செல்ல
அனுமதிக்கப்படும் போது
எங்கள் கற்பின் எல்லை
விரிவாக்கப்படுகிறது"
- கவிஞர் ரோகிணி
படித்த நொடியில் ஏதேதோ பாதிப்புகளை ஏற்படுத்திய இக்கவிதை - தங்கர்பச்சான், குஷ்பு என அனைத்து கற்பு சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்கான பதில்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது! கற்பின் பயன்பாடு எவ்வளவு சுயநலமானது என்பதை இதவிட எளிமையாகவும், வலிமையாகவும் சொல்லமுடியும் எனத்தோன்றவில்லை. முகத்திலறையும் நிஜமும், மெல்லிதாய் இழையோடும் சோகமும் இக்கவிதையின் வெற்றி.
கவிஞர் ரோகிணி யாரெனத்தெரியவில்லை. அவரைப்பற்றியும், அவரின் பிற படைப்புகள் பற்றியும் காணக்கிடைத்தால் மகிழ்ச்சி. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.