Wednesday, May 24, 2006

வலைப்பதிவு ஆய்விற்காக...

மதுமிதா அவர்களின் வலைப்பதிவு ஆய்விற்காக...

வலைப்பதிவர் பெயர்: அருள்குமார்

வலைப்பூ பெயர்:
உணர்வின் பதிவுகள்
நான் பேச நினைப்பதெல்லாம்

சுட்டி(url) :
http://www.arul76.blogspot.com/
http://whatiwanttosayis.blogspot.com/

ஊர்: சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: குழலி

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 06th may 2005

இது எத்தனையாவது பதிவு: 23

இப்பதிவின் சுட்டி(url): http://whatiwanttosayis.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
பகிர்தலில்/எழுத்தில் உள்ள ஆர்வம். முழுநேர பணியாக செய்ய இயலவில்லை. கல்லூரி காலங்களில் மாணவர்கள் இதழ் நடத்திக்கொண்டிருந்தோம். இப்போது அந்த ஆர்வத்திற்கு வலைபூவே வடிகால்.

சந்தித்த அனுபவங்கள்:
இவ்வளவு பேர் மற்ற துறையில் இருந்தும் எழுத்தில் இப்படி அசத்துகிறார்களே என்ற ஆச்சர்யம்தான் அடிக்கடி. சில நல்ல விவாதங்கள் தந்த புரிதல்கள்.

பெற்ற நண்பர்கள்:
தங்களுக்கென்று வலைப்பூ இல்லவிட்டலும், என் பதிவுகளைப் படித்து email மூலம் நட்பானவர்களையும் சேர்த்து நிரைய.

கற்றவை:
இன்னும் நிரைய கற்க வேண்டுமென்று.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: இதுவரை எந்த கட்டுப்படுகளையும் உணரவில்லை.

இனி செய்ய நினைப்பவை:
வலைப்பதிவுகளை படிக்கவும் எழுதவும் இன்னும் அதிக நேரம் ஒதுக்கவேண்டும். நிறைய நிறைய நிறைய.. எழுதவேண்டும். எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு திரைக்கதையாவது எழுதவேண்டும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
மென்பொருள் உருவாக்கும் தொழிலில் இருக்கிறேன். வேறென்ன... வாழ்வின் அந்தந்த நிமிடங்களை ரசிக்கிற ரசிகன். கோபம் முதற்கொண்டு எனது எல்லா உணர்வுகளையும் மதிக்கிறவன். எந்த பிரச்சனையிலும் எதிராளியின் சூழலில் என்னை வைத்து பார்க்கிறவன்.

இன்னும் நான் சொல்ல நினைக்கும் ஒன்று:
வாழ்க்கை ஒருமுறைதான். இன்னொரு பிறவியில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பினும், இந்த பிறவியின் எந்த தொடர்பும் அப்போது இருக்கப்போவதில்லை எனும்போது அது ஒரு தனிப்பிறவிதான். எனவே இப்போது கிடைத்திருக்கும் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து தீர்த்துவிடுங்கள்!

Thursday, May 11, 2006

விஜயகாந்த்: வெற்றியின் ரகசியம்

தமிழ் சசி அவர்களின் தேர்தல் 2006 ஆச்சரியங்கள்
என்ற பதிவிற்கு எழுதிய மறுமொழி:

விஜயகாந்த்தின் வெற்றிக்கு நீங்கள் சொல்லும் காரணங்களை விட சில முக்கியமாண காரணங்கள் இருக்கின்றன.

அந்த தொகுதியை சார்ந்தவன் என்கிற முறையில் நான் அறிந்தவை இவை. மற்றபடி எனக்கு அரசியலில் அ ஆ கூட தெரியாது!

1. முதல் முக்கிய காரணம்: பமக வேட்பாளர் கோவிந்தசாமி சென்ற முறை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிடக்கூட செல்லவில்லை. அந்த பகுதிகள் இவர் வசிக்குமிடத்திலிருந்து சொற்ப கி. மீ. தூரத்திலிருந்தும் இந்த நிலை!

2. கட்சியின் தலைவர் என்பதால், வாய்ப்பளித்தால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள கண்டிப்பாக உருப்படியாய் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை.(ஒரு புதிய மூன்றாம் அணி என்றெல்லாம் யோசிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கக்கூடும். மூன்றாவது அணி என்று மதிக்கிற அளவிற்கு அங்கு ஒன்றுமில்லை.)

3. விஜயகாந்த் வெற்றிபெற்றால், விருத்தாசலம் ஒரு VIP தொகுதி ஆகிவிடும் என்கிற ஆவல்.

4. அதிக பரிச்சயமில்லாத அதிமுக வேட்பாளர்.

Wednesday, May 03, 2006

திரை இயக்கம்

'திரை' என்றொரு மாத இதழ். 'உலக சினிமாவின் முகம்' என்கிற அடைமொழியோடு வந்துகொண்டிருக்கிறது. படிக்கும்போது அது உண்மைதான் என உணர முடிகிறது. இதுவறை வந்திருக்கிற சினிமா இதழ்கள் அனைத்தும், சினிமா இதழ்கள் மீது, நம்மில் உருவாக்கி வைத்திருக்கிற கற்பிதங்களை உடைக்கிறது இந்த இதழ். சினிமாவில் ஆர்வமுள்ளவர்களுக்கு கிடைத்தற்கறிய விஷயம் இது.

தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய மற்றும் உலக சினிமா அனைத்தயும் அலசுகிறார்கள். தலைசிறந்த கலைஞர்களின் கட்டுரைகள், பேட்டிகள், தமிழ் சினிமாக்கள் மீதான உண்மையான சினிமா விமர்சனம் என கலக்குகிறார்கள். சமீபத்தில் கதை, திரைக்கதை அமைப்பது பற்றி ஒரு நல்ல தொடர் கட்டுரை வந்துகொண்டிருக்கிறது.

ஆசிரியர்: லீனாமணிமேகலை.
இதழின் விலை: Rs. 20.

இது விளம்பரம் அல்ல! மேற்காணூம் தகவல்கள், திரை இதழ் பற்றி அறியாதவர்களுக்காக. இந்த இடுக்கையின் நோக்கம்:

இவர்கள் 'திரை இயக்கம்' என்றொரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
"உலக சினிமாக்களையும், நல்ல குறும்படங்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்தும், அவற்றை காண இயலாத திரைப்பட ஆர்வலர்களுக்கு, அவற்றை காணக் களம் அமைக்கும் இயக்கமே திரை இயக்கம்" - என்கிறார்கள்.


இதில் உறுப்பினர் ஆவதற்கு 20 பேர் ஒரு குழுவாக சேர்ந்து ஒவ்வொருவரும் 'திரை' இதழ் சந்தாதாரர் ஆகவேண்டும். (ஆண்டு சந்தா 200/=). நானும் எனது நண்பர்கள் சிலரும் இந்த இயக்கத்தில் சேர ஆர்வமுற்றிருக்கிறோம். ஆனாலும் 20 பேர் வேண்டுமே! சென்னையில் இருக்கும் உங்களில் யாருக்கேனும் இதில் ஆர்வமிருந்தால் எங்களுடன் சேர்ந்துகொள்ள அழைக்கிறோம். எங்களைப்போலவே இதில் ஆர்வமிருந்தும் 20 பேர் வேண்டுமே என காத்திருக்கும் குழுக்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

நட்புடன்,
அருள்.