Wednesday, May 03, 2006

திரை இயக்கம்

'திரை' என்றொரு மாத இதழ். 'உலக சினிமாவின் முகம்' என்கிற அடைமொழியோடு வந்துகொண்டிருக்கிறது. படிக்கும்போது அது உண்மைதான் என உணர முடிகிறது. இதுவறை வந்திருக்கிற சினிமா இதழ்கள் அனைத்தும், சினிமா இதழ்கள் மீது, நம்மில் உருவாக்கி வைத்திருக்கிற கற்பிதங்களை உடைக்கிறது இந்த இதழ். சினிமாவில் ஆர்வமுள்ளவர்களுக்கு கிடைத்தற்கறிய விஷயம் இது.

தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய மற்றும் உலக சினிமா அனைத்தயும் அலசுகிறார்கள். தலைசிறந்த கலைஞர்களின் கட்டுரைகள், பேட்டிகள், தமிழ் சினிமாக்கள் மீதான உண்மையான சினிமா விமர்சனம் என கலக்குகிறார்கள். சமீபத்தில் கதை, திரைக்கதை அமைப்பது பற்றி ஒரு நல்ல தொடர் கட்டுரை வந்துகொண்டிருக்கிறது.

ஆசிரியர்: லீனாமணிமேகலை.
இதழின் விலை: Rs. 20.

இது விளம்பரம் அல்ல! மேற்காணூம் தகவல்கள், திரை இதழ் பற்றி அறியாதவர்களுக்காக. இந்த இடுக்கையின் நோக்கம்:

இவர்கள் 'திரை இயக்கம்' என்றொரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
"உலக சினிமாக்களையும், நல்ல குறும்படங்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்தும், அவற்றை காண இயலாத திரைப்பட ஆர்வலர்களுக்கு, அவற்றை காணக் களம் அமைக்கும் இயக்கமே திரை இயக்கம்" - என்கிறார்கள்.


இதில் உறுப்பினர் ஆவதற்கு 20 பேர் ஒரு குழுவாக சேர்ந்து ஒவ்வொருவரும் 'திரை' இதழ் சந்தாதாரர் ஆகவேண்டும். (ஆண்டு சந்தா 200/=). நானும் எனது நண்பர்கள் சிலரும் இந்த இயக்கத்தில் சேர ஆர்வமுற்றிருக்கிறோம். ஆனாலும் 20 பேர் வேண்டுமே! சென்னையில் இருக்கும் உங்களில் யாருக்கேனும் இதில் ஆர்வமிருந்தால் எங்களுடன் சேர்ந்துகொள்ள அழைக்கிறோம். எங்களைப்போலவே இதில் ஆர்வமிருந்தும் 20 பேர் வேண்டுமே என காத்திருக்கும் குழுக்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

நட்புடன்,
அருள்.

14 comments:

வவ்வால் said...

ம்ம் ... நீங்கள் சொல்வது கேட்க நன்றாக வித்யாசமா இருக்கிறது ஆனால் சினிமா பத்திரிக்கையை அதுவும் 20 ரூபாய் விலை கொடுத்து வாங்குவது சராசரி இந்தியனுக்கு சாத்தியமா. அப்படியே வாங்குவதால் ஏதேனும் திடீர் மாற்றம் ஏற்பட போகிறதா தமிழ் திரை உலகில்? அதே தாதா நாயகன்...கல்லூரி மாணவி நாயகி மீது காதல் வச பட்டு திருந்துவது ,இந்த லட்சணத்தில் திரைனு ஒரு பத்திரிக்கை வாங்கனுமா?பத்திரிகை வாங்காமல் குறும்படங்கள் பார்க்க வழி இருந்தால் சொல்லுங்கல்!

பிச்சைப்பாத்திரம் said...

Arul,

Thanks for info. I am interested in joining your group. pl. send your contact no. to my e-mail id.

sureshkannan@touchtelindia.net


- Suresh Kannan

அருள் குமார் said...

//இந்த லட்சணத்தில் திரைனு ஒரு பத்திரிக்கை வாங்கனுமா?//
நியாயமான கேள்விதான். இருந்தாலும் ஒருமுறை திரை இதழை எங்காவது பார்த்தீர்களானால் உங்கள் கருத்து மாறிவிடும் என நம்புகிறேன்.

//அதே தாதா நாயகன்...கல்லூரி மாணவி நாயகி மீது காதல் வச பட்டு திருந்துவது // இவற்றையெல்லாம் சினிமாவாக திரை இதழ் மதிப்பதில்லை. இதையெல்லாம் தாண்டி சினிமாவில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன என்பதைத்தான் அது சொல்கிறது. உலக சினிமாவின் தரம் அறிந்தால் நம்மால் இத்தகைய படங்களை பார்க்கவும் முடியாது, இயக்குனர்கள் எடுக்கவும் மாட்டார்கள். திரை இதழ் நமது ரசனையை வளர்க்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நீங்கள் மற்ற சினிமா இதழ்களைப்போல் இதையும் நினைத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்.

அருள் குமார் said...

நன்றி சுரேஷ். உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன்.

ஓவியன் said...

Usefull information. Can you please let me know the address where i can subscribe for this magazine.

அருள் குமார் said...

ஓவியன், இந்த இடுக்கையில் இருக்கும் படத்தில் 'கனவுப்பட்டறை' முகவரி இருக்கிறது பாருங்கள். அங்கு தொடர்புகொள்ளலாம்.

வவ்வால் said...

திரு அருள்,
நீங்கள் சொல்வது சரிதான்..தமிழில் தரமான ஆவண படம்/குறும்படஙள் வருகிறதா... நான் ஒரு சிலவற்றை பார்த்தேன்.. பாரமுகம்,உயிரே உயிரே,தோழா, நிறப்பிரிகை,போன்றவை,இவை ஆன் லைனில் இலவசமாக கிடைகின்றது.அவபோது தூர்தர்ஷன் குறும்படங்கள் போடும் பார்ததுண்டு .ஆனால் தமிழ் இணைதள படங்கள் ஒரு ஃபாரன் ஹீட் 11/12 போல வரவில்லை எதோ ஒன்று குறைகின்றது.அதற்கு காரணம் என்னவாக இருக்க கூடும்?

Nirmala. said...

அருள், நானும் சேர்ந்து கொள்கிறேன்.

nivedha_1@yahoo.com

அருள் குமார் said...

@வவ்வால்:
நன்றி வவ்வால். இதற்கு ஒரு வரியில் பதிலலித்துவிடமுடியாது. ஒரு தனி பதிவே பேடவேண்டும்!

@நிர்மலா:
நன்றி நிர்மலா. உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன்.

இளங்கோ-டிசே said...

'திரை', ஆக ஜனரஞ்சகத்தனத்துடனோ, தீவிரத்துடனோ வராது இரண்டுக்கும் இடையில் இருப்பது நல்ல விடயம். ஆனால் ஏற்கனவே பொதுத்தளத்தில் விவாதிக்கப்படும் திரைப்படங்களைத் தவிர்த்து, இன்னமும் வெளிப்பார்வைக்கு வராத படங்கள - முக்கியமாய் ஆவணப்படங்கள்- குறித்து எழுதினால் இன்னும் நன்றாகவிருக்கும். கடைசி இதைழில் தமிழ்ச் சினிமா குறித்து, அஜயன் பாலா எழுதிய கட்டுரை (இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம் என்றாலும்) முக்கியமானது.

நிலா said...

voval

you made my day!

Thanks for your opinion on nirapirigai :-)

I too agree with you that Tamil documentaries are not of world standard. Reason - I would say, exposure, facilities, cultural background

அருள் குமார் said...

//இன்னமும் வெளிப்பார்வைக்கு வராத படங்கள - முக்கியமாய் ஆவணப்படங்கள்- குறித்து எழுதினால் இன்னும் நன்றாகவிருக்கும். //

சரியாக சொன்னீர்கள் டிசே தமிழன். ஆனால் இவற்றை விரைவில் எதிர்பார்க்கலாம் என நம்புகிறேன்.

ரிஷி said...

Arul,

I also like to join in that group.

Let me know the details.

sriku_dev@yahoo.com

Rishi

அருள் குமார் said...

நிச்சயமாக ரிஷி,
விரைவில் தெரியப்படுத்துகிறேன். நன்றி.