Wednesday, March 29, 2006

ரகசிய சிக்னல்

மிழ்நாட்டு மக்களின்(என்னையும் சேர்த்துதான்!) அனுசரித்துப்போகும் மனோபாவம் மிக அலாதியானது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் கீழே இருக்கும் படம்.


(cell phone-ல் எடுத்த படம். எடுத்தபோது சூரியஒளி வேறு எதிர்ப்பக்கமிருந்து...! சரியாய் தெரியலன்னாலும் கொஞ்சம் adjust பண்ணி பாத்துப்பீங்கன்னு நம்பறேன்:) )

சென்னை 100 அடி சாலையில் MMDA நிறுத்தத்திலிருந்து வடபழனி செல்லும் வழியில், MMDA சிக்னலுக்கு அடுத்து வரும் சிக்னல் இது. பல மாதங்களாகவே இந்த சிக்னல், ஒரு மின்விளக்கு கம்பத்தின் பின் ஒளிந்துகொண்டு, நம்ம கிராமத்து காதலிகள் காதலன்களுக்கு கொடுக்கும் ரகசிய சிக்னல் போலத்தான் சிக்னல் கொடுத்துக்கொண்டிருக்கிறது!

சில கோணங்களில் 'நில், கவனி, செல்' இந்த மூன்றும் சுத்தமாக தெரிவதில்லை. seconds coundown-ல் கூட ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு இலக்கங்கள்தான் தெரியும். 110 வினாடிகள் இருக்கையில் 10 வினடிகள் தான் இருப்பதாய் அடித்து பிடித்துக்கொண்டு, முழு திறமையையும் பயன்படுத்தி வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களை பார்க்கையில் வேடிக்கையாய் இருக்கும். நிரைய விபரீதங்கள் நிகழ வாய்ப்பிருந்தும் யாரும் அதை கண்டுகொள்வதாய் தெரியவில்லை. (தினசரி இரண்டு முறை அந்த சிக்னலை கடக்கும் என்னையும் சேர்த்துதான்!)

இதை யாரிடம் கேட்ப்பது? கேட்டால் நமக்கு என்ன பிரச்சனைகள் வரும்? அப்படியே கேட்டாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுமா? இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நமது நேரத்தை வீணாக்குவதை விட இதை adjust பண்ணி போவது மிக எளிதாகத்தானே இருக்கிறது! இவ்வளவையும் தினசரி பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருக்கும் போக்குவரத்து காவல்துறை காவலருக்கு இல்லாத கடமை நமக்கென்ன வந்தது? - இந்த எண்ணம் தான் நம்ம specialty! இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக பார்க்காமல்,
"மச்சி... அந்த சிக்னல பாரேன். நைசா ஒளிஞ்சிகிட்டு ரகசிய சிக்னல் கொடுக்குது..!" என்று ரசித்து சிரிக்கிற கலைரசனை உடையவர்கள் நாம்!

பல வருடங்களுக்கு பிறகு, சென்ற கோடையில், கனடாவிலிருந்து நம்ம ஊருக்கு வந்திருந்தார் என் நண்பனின் மாமா. அவர் கேட்ட சில கேள்விகளும், சொன்ன சில விஷயங்களும்:

"நம்ம ஊர்லதாம்ப்பா இப்படி எல்லா விஷயத்தையும் adjust பண்ணி போறோம். அத்தியாவசியமான தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து இதெல்லாமே தினசரி போராட்டமா இருந்தா எப்படிப்பா முன்னேற முடியும்? ரொம்ம்ம்ம்ப கஷ்டம்! கனடாவுலல்லாம் maintenence-க்காக power-cut பண்ணாகூட மூனு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க. இங்க என்னடான்னா ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை power-cut பண்றாங்க. அதும் எந்த அறிவிப்பும் இல்லாம! இதெல்லாம் தாம்ப்பா ஒரு நாட்டோட முன்னேற்றத்தை தடுக்கிற விஷயங்கள். நீயே யோசிச்சு பாரு... தண்ணிக்காக ராத்திரி ஒரு மணிக்கும், ரெண்டு மணிக்கும் தூங்காம தண்ணி லாரிக்கு காத்திருந்து, அதையும் சண்ட போட்டு போராடி வாங்கறவன் அடுத்த நாள் office போயி(பஸ் பிடிச்சி போறது ஒரு தனி போராட்டம்!) அவன் வேலைய சரியா செய்யமுடியுமா? அப்புறம் productivity எப்படி இருக்கும்?! காலைல எழுந்து பைப் திறந்தா தண்ணி நம்ம வீட்டுக்குள்ள வரணும். இது நமக்கு நம்ம அரசாங்கம் தரவேண்டிய அடிப்படை வசதி. தரவேண்டியது அவங்க கடமை. அதுக்குதான வரி கட்டறோம்!"

தினசரி வாழ்வின் அத்தியாவசியங்களை குடிமக்களுக்கு வழங்குவது ஒரு அரசின் கடமை என்பதையே மறந்துவிட்டு, அரசு விதிக்கும் வரிகளையும் செலுத்தி, எல்லா பிரச்சனைகளையும் தாங்களே சமாலிக்கும் நம் மக்கள் - நமது அரசியல்வாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தானே!

நாம் வாக்களித்து பதவியில் அமரச்செய்தவர்கள் நமக்கே செய்யும் அக்கிரமங்களையே கண்டுகொள்ளாமல் adjust பண்ணிக்கொள்கிற நமக்கு இந்த சிக்னல் பிரச்சனையெல்லாம் ஒரு விஷயமா என்றுதானே சிரிக்கிறீர்கள்.

அதுவும் சரிதான் :(