Friday, June 30, 2006

நிலவு நண்பனை வாழ்த்த வாருங்கள்

நிலவு நண்பனின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்த இயலாதவர்கள் ஒரு வாழ்த்து அட்டையின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம் என்றிருக்கிறோம். ப்ரியன் நமது சார்பாக திருமணத்தன்று அதனை ஞானியார் வசம் சேர்ப்பார் (தயவுசெய்து அதற்கு முன் இதனை ஞானியாருக்கு யாரும் தெரியப்படுத்தவேண்டாம். ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே!). இதுவரை வந்த வாழ்த்துக்கள் இங்கே...

(புதிதாக இணைக்கப்பட்ட வாழ்த்துக்களுடன்)

இதில் தங்கள் வாழ்த்துக்களை இணைக்க விரும்புபவர்கள் இங்க பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம். ஏற்கனவே இங்கு வாழ்த்து சொன்னவர்கள், வரிகளை மாற்ற விரும்பினாலும் தெரியப்படுத்துங்கள். இந்திய நேரம் நாளை காலை 10.00 மணிக்குள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பினால் இணைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

நன்றி :)

31 comments:

பொன்ஸ்~~Poorna said...

இந்த வாழ்த்தட்டையின் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்று விரும்பினாலும் சொல்லுங்க.. எல்லா விதமான விமர்சனம், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

VSK said...

CAN THIS BE ADDED TOO!

நிலவைக் கண்டு,
நிலவை ரசித்து,
நிலவை அடைய
நிறையக் கனவுடனே
நித்தமும் முனைந்து
நிலவை நோக்கி
நெஞ்சப் பயணமாகி
நிலவை இன்று
நிக்காஹ் செய்யும்
நிலவு நண்பனே!
நினக்கு வாழ்த்துகள்!

நிலவின் அழகினை ரசித்து வந்தாய் இதுவரை!
நிலவில் குளுமை உண்டு, களிப்பும் உண்டு
நிலவில் மேடும் உண்டு, பள்ளங்களும் உண்டு
நிலவை நேசித்து, நிலவு முகம் வாடாமல்
நிலவின் நண்பனாய், நெருங்கிய தோழனாய்
நிலவைப் பேணி, போற்றி,பகிர்ந்து, பணிந்து
நிலவுள்ள வரை, நிலமுள்ள வரை
நிடூழி வாழ வாழ்த்துகிறேன்!

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்கு எஸ் கே, ஆனா மத்த வங்களுக்கு இடம் இருக்குமா? :))))
சேர்க்க முயல்கிறோம்.. ஏற்கனவே உங்க பெயரில் இருக்கும் வாழ்த்தை எடுத்துவிடலாம் தானே?

நாகை சிவா said...

ரசிகவ் ஞானியார்!
இது வரை நிலவின் நண்பனாய் வெளியில் இருந்து நிலவை ரசித்து கொண்டு இருந்தாய், இன்று முதல் நிலவில் குடியேற போகின்றாய். வாழ்த்துக்கள்.
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாண்டு"
எல்லாம் வளமும் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
நாகை சிவா.

Anonymous said...

Nilavu Nanban
Congratulations and best wishes for the two of you to lead a peaceful and satisfying life.

-Kajan

நாகை சிவா said...

நல்ல முயற்சி. அருள் மற்றும் பொன்ஸ், உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேரில் கொடுக்க இருக்கும் ப்ரியனுக்கு என் நன்றிகள்.
நான் அனுப்பிய பின்னூட்டத்தை சேர்த்துக் கொள்ளவும்.

Santhosh said...

நண்பா,
என்றென்றும் உன் வாழ்வு சிறக்க என் இனிய வாழ்த்துக்கள்.

சந்தோஷத்துடன்
சந்தோஷ்.

Unknown said...

இதயங்களின் இணைப்பு விழா
இனி உன் வாழ்க்கை இனிக்கும் பலா
இன்பத் தமிழ் மணம் கோர்த்து
இணைய நெஞ்சங்கள் சொல்கிறோம் வாழ்த்து

ராபின் ஹூட் said...

நண்பரே, நன்கு சிறப்போடு பல்லாண்டு காலம் இணைபிரியாமல் வாழ வாழ்த்துகிறேன்.

இடப்பற்றாக்குறை காரணமாக இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். :))

கால்கரி சிவா said...

இனிய இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
கால்கரி சிவா

VSK said...

இடமடைக்க விரும்பவில்லை.
அவருக்கு ஏற்கெனவே இதனை அவர் பதிவிலும் இட்டிருக்கிறேன்.
எனவே, மற்றவர்க்கு இடம் கொடுக்க வேண்டி, இதனை இட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இல்லை போட்டுத்தான் ஆவேன் என்று அடம் பிடித்தீர்களென்றால்{:))!!}, மற்றதை எடுத்து விடவும்!

நிலைமை மாறினால், பெரிய அட்டையாகத் தயார் செய்யப் போகிறீர்கள் என்றால், அப்போது கவனிக்கவும்!!!
நன்றி.

[பி.கு.: என் வாழ்த்தை இட்டிருப்பதைக் கவனிக்கவில்லை. நன்றி.]

பொன்ஸ்~~Poorna said...

எஸ்கே சொன்னதுக்கப்புறம் மக்களே, யார் யார் பெயர் உள்ளது என்று தெரியாமல் போய்விடும் வாய்ப்பு இப்போ தான் புரிந்தது.

இருக்கும் பெயர்களின் பட்டியல் இங்கே:

மு.முத்துகுமரன்
சிவராமன் கணேசன்
முத்து ( தமிழினி)
துபாய்வாசி
யோகன் பாரிஸ்
நாகை சிவா
நன்மனம்
Pot"tea" kadai
கோவி.கண்ணன்
கோபி(Gopi)
அப்டிப்போடு
டுபுக்கு
manasu
NellaiKanth
துளசி கோபால்
கைப்புள்ள
யாத்திரீகன்
நாகு
இளவஞ்சி
sivagnanamji
பரஞ்சோதி
நெல்லை சிவா
chinthamani
SK
காசி (Kasi)
Dev
ILA(a)இளா
பொன்ஸ்

இதைப் பார்த்துவிட்டு உங்க வாழ்த்தை மாற்றணுமா என்றும் சொல்லுங்க.

எஸ்கே,
உங்க முதல் வாழ்த்து முத்தான வாழ்த்து, குறுகித் தரித்த குறளான வாழ்த்து.. அதையே அப்படியே வச்சிக்கிறோம்.. இந்த நிலவு வாழ்த்தை நண்பன் வந்ததும் கொடுக்கிறோம்... :))

VSK said...

ஏது செய்திடினும் எனக்குச் சம்மதமே!
:)))

சிறில் அலெக்ஸ் said...

நிலவு நண்பனுக்கும் நிலவு நண்பிக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
சிறில் அலெக்ஸ் & FAMILY

கப்பி | Kappi said...

இன்று முதல் நிலா பூமியை விடுத்து தன் நண்பனைச் சுற்றி வரப்போகிறது! வாழ்த்துக்கள் ரசிகவ் ஞானியார்!

Anonymous said...

அடடா.. என்னை விட்டுட்டீங்களே..
தாமதமாக வந்துட்டேனா?

மணமக்களுக்கு
என் இதயம் கனிந்த
திருமணவாழ்த்துக்கள்..

நேசமுடன்..
-நித்தியா

பொன்ஸ்~~Poorna said...

நாகை சிவா,
தனி வாழ்த்தட்டை தான் போடணும் நீங்க எழுதி இருப்பதைச் சேர்க்கணும்னா.. கொஞ்சம் உங்க பேர்ல ஏற்கனவே இருக்கும் வாழ்த்தைப் பார்த்து விட்டு அதுக்கு மேலும் சேர்க்கணுமான்னு சொல்லுங்க..

நவீன் ப்ரகாஷ் said...

நிலவோடு வாழப்போகும் நிலவுக்கு
வாழ்த்துக்கள் !
- நவீன் ப்ரகாஷ்

அருள் குமார் said...

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நிலவு நண்பன் சார்பில் நன்றிகள் :)

KK said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துவிடுங்கள்..

நிலவுக்கும் நிலவு நண்பனுக்கும் மணமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!

ஜென்ராம் said...

நிலவு நண்பனுக்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்..

அருள் குமார் said...

sorry ராம்கி, சற்று முன் தான் எல்லா வாழ்த்துக்களையும் இணைத்து print பண்ண அனுப்பினோம். அதனால் உங்கள் வரிகளை அதில் சேர்க்க இயலவில்லை.

புதிதாக இணைக்கப்பட்டுள்ள வாழ்த்துக்கள் அடங்கிய படம் update செய்யப்பட்டுள்ளது.

நன்றி :)

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.. இத்தோட இந்த வாழ்த்தை அனுப்பியாச்சு.. இனிமே சொல்றவங்க, காத்திருந்து நிலவும் நண்பனும் வந்தபின் தான் சொல்லணும் :))

கதிர் said...

என்றென்றும் சந்தோஷமாக வாழ்க்கை அமைய என் வாழ்த்துக்கள்

அன்புடன்
தம்பி

அருள் குமார் said...

வாங்க தம்பி!

மேலே பொன்ஸ் அவர்கள் சொல்லியிருப்பதை கவனிக்கவில்லையோ! சரி விடுங்கள், உங்கள் வாழ்த்தினை நிலவு நண்பன் இந்த பதிவினை படிக்கும்போது தெரிந்துகொள்வார்.

இப்போதைக்கு அவர் சார்பாக எங்களின் நன்றி :)

வெற்றி said...

அன்பின் நிலவுநண்பன் அவர்கட்கும்,அவரின் வாழ்க்கைத் துணைவிக்கும் என் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள். மணவாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று அவர்கள் வாழ்வு இனிக்க என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
வெற்றி

குழலி / Kuzhali said...

இனிய திருமண வாழ்த்துகள் நிலவு நண்பன்

அபூ முஹை said...

''இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக!

நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக!

உங்களின் சந்ததிகளில் அபிவிருத்தியை ஏற்படுத்துவனாக!''

நிலவு நண்பனுக்கு இதயம் நிறைந்த மணவாழ்த்துக்கள்.

அன்புடன்,
அபூ முஹை

Chellamuthu Kuppusamy said...

கட் ஆஃப் பைம் முடிஞ்சுருச்சுங்களா? இல்லைன்னா
********
இனிய மணவாழ்வுக்கு வாழ்த்துக்கள்
********
வரியையும் சேத்துடுங்க பிளீஸ்.

பொன்ஸ்~~Poorna said...

கட் ஆப் டைமா? கல்யாணமே முடிஞ்சிடுச்சு குப்பு :))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இது எனக்கு மிகவும் வித்தியாசமான பரிசு.

வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்..

புல்லரிக்க வச்சிசிட்டீங்கப்பா..

அன்புடனும் நன்றியுடனும்

ரசிகவ் ஞானியார்