Thursday, May 11, 2006

விஜயகாந்த்: வெற்றியின் ரகசியம்

தமிழ் சசி அவர்களின் தேர்தல் 2006 ஆச்சரியங்கள்
என்ற பதிவிற்கு எழுதிய மறுமொழி:

விஜயகாந்த்தின் வெற்றிக்கு நீங்கள் சொல்லும் காரணங்களை விட சில முக்கியமாண காரணங்கள் இருக்கின்றன.

அந்த தொகுதியை சார்ந்தவன் என்கிற முறையில் நான் அறிந்தவை இவை. மற்றபடி எனக்கு அரசியலில் அ ஆ கூட தெரியாது!

1. முதல் முக்கிய காரணம்: பமக வேட்பாளர் கோவிந்தசாமி சென்ற முறை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிடக்கூட செல்லவில்லை. அந்த பகுதிகள் இவர் வசிக்குமிடத்திலிருந்து சொற்ப கி. மீ. தூரத்திலிருந்தும் இந்த நிலை!

2. கட்சியின் தலைவர் என்பதால், வாய்ப்பளித்தால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள கண்டிப்பாக உருப்படியாய் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை.(ஒரு புதிய மூன்றாம் அணி என்றெல்லாம் யோசிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கக்கூடும். மூன்றாவது அணி என்று மதிக்கிற அளவிற்கு அங்கு ஒன்றுமில்லை.)

3. விஜயகாந்த் வெற்றிபெற்றால், விருத்தாசலம் ஒரு VIP தொகுதி ஆகிவிடும் என்கிற ஆவல்.

4. அதிக பரிச்சயமில்லாத அதிமுக வேட்பாளர்.

13 comments:

Radha N said...

இந்த முறை மக்கள் வாய்ப்பளித்திருப்பதை வி ஜயகாந்த் நல்லமுறையில் பயன்படுத்திக்கொ ள்வதைப் பொருத்துதான் அவருடைய கட்சியின் வா ழ்நாள் நிர்ணயிக்கப்பட போகிறது.

அருள் குமார் said...

நிச்சயமாக நாகு.

Sivabalan said...

நீங்க சொல்வது சரி!! ஆனாலும்,
பாமக கோட்டையில் வெல்வது என்பது பெரிய விசயம்!

தமிழ் சசி | Tamil SASI said...

Arul,

i agree with you

Thanks

அருள் குமார் said...

நன்றி சசி.

சிவபாலன், நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் மக்கள் முன்பு மாதிரி இல்லை. ஒரே ஜாதியாக இருந்தாலும் தங்களுக்கு எதுவும் செய்யாதவர்களுக்கு தாங்களும் எதுவும் செய்வதாய் இல்லை. இதே உணர்வு அவர்களுக்கு இருந்திருந்தால் தம்மக்களுக்கு எவ்வளவோ செய்திருக்கலாமே!

பிரதீப் said...

நீங்கள் சொல்வது சரிதான்.
எல்லாவற்றிற்கும் மேலாக விஐபி தொகுதி அந்தஸ்தை விருத்தாசலம் என்றோ பெற்று விட்டது. பத்திரிகைகளும் மும்முனைப் போட்டி என்பதை ஒத்துக் கொண்டு விட்டன.

நம்ம மக்களுக்கு எப்பவுமே விஐபிகள் மேல ஒரு தனிப்பாசம். ஏதும் பெரிய அலை வீசாத போது விஐபிக்களை அவங்க கைவிடவே மாட்டாங்க.

இதே பாண்டிச்சேரியில பாருங்க, தலைவர்கள் எல்லாம் தோத்து தொண்டர்கள் ஜெயிக்கிறது சர்வ சாதாரணமா நடக்குது.

எனிவே, விஜயகாந்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாமக கோட்டையை அசைத்த அவரது துணிச்சலுக்குப் பாராட்டுகள். யாரும் இல்லாமலே பாமக கோட்டை இம்முறை புரையோடிப் போயிருந்தது வேறு விசயம் :)

அருள் குமார் said...

//பாமக கோட்டையை அசைத்த அவரது துணிச்சலுக்குப் பாராட்டுகள். //
ஆமாம் பிரதீப். உண்மையில் பெரிய துணிச்சல் தான். ஆனாலும் பாமக வும் திமுக வும் இவரை தொகுதிக்கு ஏதாவது செய்ய விடவேண்டுமே! பார்க்கலாம் எப்படி சமாளிக்கிறார் என்று.

Anonymous said...

Thozhargalaey...vanakkangal!

En Paeyar Kaarthikeyan.Oru nalla Blog idhu. nalla soodaana sambhavangalai alasi paarkum pakkamaaga idhu ulladhu.

Mudhalil mannika vaendum nanbargalaey...enakku tamil'il type panna thaeriyaadha kaaranathaal...ingu aangila vaarthayil pagirndhu kolgiraeyn..

Watever it be, i appreciate & congratulate with Mr.Vijayakanth's victory first.

my critics:

The PMK contestant has lost the credits due to his poor past happz.meanwhile we need to think abt other factors like...

1. The same vijaykanth if he really wanted to check his power/influence he could have contested in thindivanam( a PMK belt supposed to be) rather being contesting from viruthaachalam.Could he challenge?

2. after the first round of police report ,he comes to know that his fans & supporters are more in that particular area ( out of all PMK belts) It is not a factas he said, a party leader should be selected from any part of tamilnadu.

3.could he be selected from aandipatti ?
could he contest from thindivanam where MUMMUNAI potti is there!

After all he is also a politician - simply an old wine served in a new bottle.

Lets c whether he utilizes this golden opportunity in the right way!

-Karthik

குழலி / Kuzhali said...

பாமக வேட்பாளர் மீதிருந்த அதிருப்தி விஜயகாந்த் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறினாலும் வாக்கு வித்தியாசத்தை வைத்து பார்க்கும் போது நல்ல பெயர் எடுத்துள்ள பாமக நகர்மன்ற தலைவர் வள்ளுவனோ அல்லது முந்தைய திமுக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசனோ நின்றிருந்தாலும் கூட வாக்கு வித்தியாசத்தை குறைத்திருக்கலாமே தவிர விஜயகாந்த்தின் வெற்றியை பாதித்திருக்க முடியாது என கருதுகிறேன்.

நக்கீரன்,விகடன்,குமுதம் என அனைத்து பத்திரிக்கைகளாலும் பாராட்டப்பட்ட மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விகடனில் உங்க ஊர் எம்.எல்.ஏ, என்ற தொடரில் 30,40 மதிப்பெண்கள் வாங்கியபோது 70 மதிப்பெண்கள் வாங்கியவர் தமிழகத்தின் மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், நிறைய அடிப்படை வசதிகள் செய்து தந்தவர் என கலைஞரிடம் பாராட்டு பெற்ற குழந்தை தமிழரசனே சென்ற தேர்தலில் விருத்தாசலத்தில் தோல்வியை தழுவியவர் தானே, எனவே பாமக வேட்பாளர் அதிருப்தியையும் தாண்டி விருத்தாசலத்தில் விஜயகாந்த்தின் கவர்ச்சி செல்லுபடியாகியுள்ளது, விருத்தாசலமும் தமிழகத்தின் மற்றைய தொகுதிகளைப் போன்ற ஒரு சராசரி தொகுதி.

//கட்சியின் தலைவர் என்பதால், வாய்ப்பளித்தால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள கண்டிப்பாக உருப்படியாய் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை.
//
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள்...

கருப்பு said...

குழலி சொல்வதை எல்லாம் நம்பாதீங்க. நான் ஒரு பதிவு எழுதி இருக்கேன், படிச்சு பாருங்க.

அடுத்த தேர்தலில் விஜயகாந்த் முக்கிய சக்தியாக விளங்குவார்.

Unknown said...

//பாமக வேட்பாளர் அதிருப்தியையும் தாண்டி விருத்தாசலத்தில் விஜயகாந்த்தின் கவர்ச்சி செல்லுபடியாகியுள்ளது, //

:)

அருள் குமார் said...

கார்த்திக்,

//After all he is also a politician - simply an old wine served in a new bottle.

Lets c whether he utilizes this golden opportunity in the right way!//
அனைவரும் இதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

குழலி,
//விருத்தாசலமும் தமிழகத்தின் மற்றைய தொகுதிகளைப் போன்ற ஒரு சராசரி தொகுதி// இருக்கலாம். ஆனாலும் குழந்தை தமிழரசனையும் விட்டு, பாமக வுக்கு வாக்களித்து ஏமாந்ததை உணர்கிறோம். அதுதான் இந்த தேர்தல் முடிவில் தெரிகிறது. விஜயகாந்த் என்ன செய்கிறார் என்பதை பொறுத்துதான் அடுத்த தேர்தல் முடிவு இருக்கும்!

விடாதுகறுப்பு,
//குழலி சொல்வதை எல்லாம் நம்பாதீங்க.// சரியாக சொன்னீர்கள் :)

நன்றி தேவ்.

அருள் குமார் said...

எனக்கு அப்படியொன்றும் தோன்றவில்லை நம்பி.