Friday, November 24, 2006

சிலை சொல்லும் கதை

குதிரையின் மீது நிர்வானமாய் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்னிற்கு ஒரு கதை இருக்கிறது. அவள் ஒரு இளவரசி. தன் நாட்டின் நலனுக்காக இப்படிச் சொய்யவேண்டிய சூழல் அவளுக்கு.

எங்கள் AVC கல்லூரியின் கலையரங்கத்தின் முன் இந்த சிலை முன்பு இருந்தது. ஒத்திகைகளின் இடையிலோ அல்லது தனிமை தேவைப்படும்போதோ, இந்த சிலைக்கு எதிரில் இருந்த மைதானத்தை ஒட்டிய பெஞ்சில் அமர்வது என் வழக்கம். இவளின் கதை உண்மையா பொய்யா என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் ஏனோ இந்த சிலையை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. எங்கள் கல்லூரியில் நடந்த ஒரு ஓவிய கண்காட்சிக்காக அந்த சிலையைப் பார்த்து நான் வரைந்த ஓவியம் தான் மேலே இருப்பது.

ரி கதைக்கு வருவோம். முன்னொரு காலத்தில், இவளுடைய நாட்டில் சில ஆண்டுகளாக மழை பொய்த்துப்போய் பெரும் பஞ்சம் சூழ்ந்தது. அரசினால் சமாளிக்கவே முடியாத சூழல். ஏதேதோ முயற்சிகளுக்குப் பின், மழை வேண்டி ஒரு யாகம் நடத்துகிறார் மன்னர். அந்த யாகத்தின் ஒரு பகுதியாய், அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு கன்னிப் பெண், நிர்வானமாய் குதிரையின் மீதமர்ந்து நாட்டை வலம்வர வேண்டும்!

நாடெங்கும் இந்தச் செய்தி அறிவிக்கப் படுகிறது. இந்த யாகத்திற்கு உதவ முன்வரும் பெண்ணுக்கு அரசின் சார்பில் என்னென்ன வழங்கப்படும் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால் நாட்டிற்காகவோ, பரிசுப் பொருள்களுக்காகவோ யாருமே தங்களின் மானத்தை இழக்க முன்வரவில்லை அந்த நாட்டில்! யாகத்திற்கு குறிக்கப்பட்ட நாள் நெருங்க நெருங்க மன்னர் மிக வேதனைக்குள்ளாகிறார். இறுதியாக, தன் நாட்டிற்காக தானே அந்த யாகத்திற்கு உதவுவதாக இளவரசி முடிவெடுக்கிறாள்!

இளவரசியின் இந்த முடிவும் நாடெங்கும் அறிவிக்கப்படுகிறது. மனம் நெகிழ்ந்த மக்கள், தங்கள் இளவரசியின் மானம் காக்க ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதன் படி, யாகத்தன்று, இளவரசி நிர்வானமாய் குதிரையில் நாட்டை வலம் வரும்போது எல்லா மக்களும் வீட்டுக்குள் அடைந்துகொள்கிறார்கள். ஒருவரென்றால் ஒருவரைக்கூட வெளியில் பார்க்க முடியவில்லை. வீடுகளின் கதவு, ஜன்னல்கள் கூட அடைக்கப்பட்டு கிடக்கின்றன. நாட்டையே காலி செய்துவிட்ட மாதிரி வெறிச்சோடி கிடைக்கிறது எல்லா வீதிகளும்.

இப்படியாக இளவரசி வலம் வர, நாடுமுழுக்க பெருமழை பெய்ய ஆரம்பிக்கிறது என்பதாக அந்தக் கதை முடிகிறது!

பின்குறிப்பு: அந்த இளவரசியின் பெயர் முதற்கொண்ட விபரங்கள் சிலைக்குக் கீழே எழுதப்பட்டிருந்ததாய் நினைவு. இப்போது மறந்துபோய்விட்டது :(

அத்துடன், இந்தச் சிலையை எங்கள் கல்லூரியில் ஏன் வைத்தர்கள் என்பது பற்றியும் தெரியவில்லை!

13 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

பிறர்நலம் நாடுவோர் நலம் பிறரால் காக்கப் படும்

கோவாடிஸ்/க்ளாடியா? பெயர் மறந்துவிட்டதே..

Santhosh said...

க்ளோடியா என்று நினைக்கிறேன்.

சேதுக்கரசி said...

இந்த இளவரசியின் கதையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

அருள் குமார் said...

நன்றி சிவஞானம்ஜி சார்!

//கோவாடிஸ்/க்ளாடியா? பெயர் மறந்துவிட்டதே.. //

எனக்கும் மறந்துபோய்விட்டது. நீங்களும் சந்தோஷும் சொல்வதுபோல் க்ளோடியா என்றுதான் தோன்றுகிறது.

நன்றி சந்தோஷ்!

நன்றி சேதுக்கரசி!

லதா said...

http://en.wikipedia.org/wiki/Lady_Godiva

Godiva (or Godgifu) (c. 990? – September 10, 1067) was an Anglo-Saxon noblewoman who, according to legend, rode naked through the streets of Coventry in England in order to gain a remission of the oppressive toll imposed by her husband on his tenants. The name "peeping Tom" for a voyeur comes from later versions of this legend in which a man named Tom watched her ride and was struck blind.
= = =

சீமாச்சு.. said...

அன்பு அருள்,
நீங்களும் AVC காலேஜா? நானும் அங்கு தான் படித்தேன் (1981-1986 B.Sc and M.Sc Maths). சமீபத்தில் நடந்த பொன் விழாக் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டீர்களா?

நீங்கள் சொல்லும் சிலையின் படத்தை இங்கே காணலாம் http://www.avccauto.ac.in/aboutus/rule.asp நமது கல்லூரியின் வெப் சைட் தான் அது.

அன்புடன்,
சீமாச்சு...

கைப்புள்ள said...

ஓவியம் அருமையாக இருக்கிறது. இளவரசியின் கதையைத் தெரிந்து கொண்டதிலும் மகிழ்ச்சி. நன்றி அருள்.

அருள் குமார் said...

தகவலுக்கு நன்றி லதா :)

சீமாச்சு,
நீங்க்ளும் AVC யா? மிக்க மகிழ்ச்சி. நான் 1993-1996 computer science. ம்.. ரொம்ப சீனியர் நீங்கள். பொன்விழாவிற்கு செல்ல இயலவில்லை :( நீங்கள் சென்றிருந்தீர்களா?

அருள் குமார் said...

//ஓவியம் அருமையாக இருக்கிறது. //
யப்பா... நீங்கள் ஒருவர்தான் ஓவியம் பற்றி பேசியிருக்கிறீர்கள். மிக்க நன்றி கைப்புள்ள :)))

Chandravathanaa said...

அருள்குமார்
இந்தக் கதையை நானும் அறிந்திருக்கிறேன்.

உங்கள் ஓவியமா அது? மிக அழகாக வரைந்திருக்கிறீர்கள்.
பார்த்ததும் இணையத்தில் இருந்து அப்படத்தை எடுத்துப் போட்டிருக்கிறீர்கள் என்றுதான் நினைத்தேன். நீங்கள் வரைந்தது என்னும் போது ஆச்சரியப் பட்டேன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அருள் குமார் said...

பாராட்டுக்கு மிக்க நன்றி சந்திரவதனா :)

G.Ragavan said...

நீங்கள் வரைந்த ஓவியமும் அழகுதான். கண்ணதாசன் சொன்னார்.

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலமறிந்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

மூடநம்பிக்கையே ஆனாலும்...நாட்டுக்காக செய்த தியாகத்தினை வியந்தே மழை பொழிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அருள் குமார் said...

பாராட்டுக்கு நன்றி ராகவன் :)