Wednesday, November 29, 2006

மகனாய் இருந்தவர்கள்!

ல்லூரி விடுதி நாட்களில் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது அப்பாவின் பொதுவான புலம்பல்(!)களில் ஒன்று, "பணம் வேணும்னாதான் லெட்டர் போடணுமா? அப்படி எழுதறப்பவாவது நாலு வார்த்தை எல்லாரையும் விசாரிக்கறதில்லை! 'அன்புள்ள அப்பா, பணம் இல்ல; இவ்ளோ பணம் அனுப்புங்க'ன்னு ரெண்டே ரெண்டு வரிதான்!". எப்போதும் இந்தக் கேள்விகளுக்கு மொளனமாய் வழிந்துவைப்பது எங்கள் வழக்கம்.

இப்படி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் எங்கள் அப்பா ஒரு முறை வசமாக மாட்டினார். எங்கள் கிராமத்து வீட்டுக்குச் சென்றிருந்த போது, பொழுதுபோகாமல் பழைய அலமாரிகளைக் குடைந்ததில் கிடைத்த ஒரு பொக்கிஷம் இது...



அன்புள்ள அப்பாவுக்கு,
நலம், நலம் காண நாட்டம். நான் தீபாவளிக்கு மாமா பரமசிவம் ஊருக்கு சென்றிருந்தேன். அவர் சைக்கிளையும் எடுத்து வந்துள்ளேன். என்னிடம் இப்போது பணம் இல்லை. உடனடியாக பணம் ரூ. 40 அனுப்பி வைக்கவும்.

பிற பின்பு.

இப்படிக்கு,
M. Sivasamy

முகவரி:-
மா. சிவசாமி,
I B.A
வரிசை எண் 437
சரபோஸி கல்லூரி
தஞ்சை

வழக்கமான டெம்ளேட்டில் ஒரு வரி சேர்த்திருக்கிறார்! வீட்டில் எல்லோரையும் மொத்தமாய் அழைத்து, இந்த கடிதத்தைக் காண்பித்து அப்பாவிடம் நியாயம் கேட்டதற்கு...

:))

வேறென்ன செய்திருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்!

எல்லா அப்பாக்களுமே மகனாய் இருந்தவர்கள்தானே :)

15 comments:

பொன்ஸ்~~Poorna said...

:))) அடப்பாவமே :))

Pavals said...

நானும் எதுக்கும் பழைய ட்ரங்க்பொட்டிய குடைஞ்சு பார்க்கிறேன்.. எங்கய்யன் ரொம்ப குத்தம் சொல்றாரு :)

Anonymous said...

பையன் பிராக்ரஸ் ரிப்போர்டை நீட்ட மார்க்குகள் குறைவாக இருப்பதைப் பார்த்து திட்ட ஆரம்பித்து பிறகு நாக்கைக் கடித்துக் கொள்கிறார். ஏனெனில் அது அவருடைய பழைய பிராக்ரஸ் ரிப்போர்ட்.

பஜ்ஜி

Anonymous said...

ஒரு பழைய துணுக்கு:

விடுதியில் இருக்கும் மகன் கடிதம் எழுதியிருந்தான்.

நலம். நலம் அறிய பணம் அனுப்பவும்

We The People said...

:)

எல்லாருக்கு இருக்கு போல இது மாதிரி ஒரு கதை.

//எல்லா அப்பாக்களுமே மகனாய் இருந்தவர்கள்தானே :) //

அதானே!

கப்பி | Kappi said...

:))

அருள் குமார் said...

//நானும் எதுக்கும் பழைய ட்ரங்க்பொட்டிய குடைஞ்சு பார்க்கிறேன்.. //

பாருங்க ராசா. ஏதாச்சும் கிடைச்சா எங்களுக்கும் சொல்லுங்க :)

//எல்லாருக்கு இருக்கு போல இது மாதிரி ஒரு கதை.//

உங்க கதை என்னன்னு சொல்லலியே ஜெய் :)

சேதுக்கரசி said...

பொன்ஸ் சொல்ற மாதிரி, அடப்பாவமே :)

அருள் குமார் said...

ஆமாம் சேதுக்கரசி; நீங்கள் எப்போது மௌனம் கலைக்கப்போகிறீர்கள்?

Anonymous said...

ஒரு விசயம் புரியுது நாம இப்படி வழியாம இருக்க..பழசயெல்லாம் பதுக்குங்க.
தாத்தா பாட்டி கூட கதை கேட்கும் போதும் கவனாமாய் இருங்க...பொதுவா அவங்கதான் போட்டு குடுப்பாங்க...உனக்கு இவ [இவன்]தேவலைன்னு..

- யெஸ்.பாலபாரதி said...

அது சரி!

நானும் படிக்கல, எங்க அப்பனும் படிக்கல.. பின்ன எப்படி அவர மடக்குறது.. நீர் அதிர்ஸ்டக்காரன் அருள்.

:-))

விழிப்பு said...

நண்பன் ஒருவன் கல்லூரிக் காலத்தில் வீட்டிற்க்கு எழுதிய மடல்.

"நலமாய் இருக்க நானூறு அனுப்புக"

சேதுக்கரசி said...

//நீங்கள் எப்போது மௌனம் கலைக்கப்போகிறீர்கள்?//

நீங்களும் கேட்க ஆரம்பிச்சிட்டீங்களா! தெரியலை.. பார்ப்போம்...

அருள் குமார் said...

//ஒரு விசயம் புரியுது நாம இப்படி வழியாம இருக்க..பழசயெல்லாம் பதுக்குங்க.//
ஆமா லக்ஷ்மி, அப்படித்தான் வச்சிருக்கேன் :)

பரவாயில்லங்க சேதுக்கரசி, நீங்க உங்க பதிவுல மட்டும் தான மௌனமா இருக்கிங்க :)

இம்சை அரசன் said...

நீர் பேச நினைப்பதெல்லாம்.. பேசலாம்.. நான் வேறு உம்மைப் பேசச் சொல்லிக் கேட்கிறேன்... இங்கே..

http://24th-pulikesi.blogspot.com/2006/12/2006.html