Sunday, November 19, 2006

சொந்தக்கதை

யக்குனர் பேரரசுவின் கதாநாயகிகள் போல் தமிழ்மணத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த என்னை, ஒரு வாரத்திற்கு, அதே இயக்குனர் பேரரசுவின் கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் கொடுத்து நட்சத்திரம் ஆக்கியிருக்கிறார்கள். மகிழ்வுடன் நன்றி!

உணர்வின் பதிவுகள் தான் நான் முதலில் ஆரம்பித்த பதிவென்றாலும், நட்சத்திர வாரத்தில் இங்கே எழுதச்சொல்லியிருக்கிறார்கள்.

நட்சத்திர அறிமுகமாய் சிலவரிகள் எழுதச்சொல்லியிருந்தார்கள் மதி அவர்கள். நமக்குதான் சுருக்கமாய் நாலுவரியில் எழுதிப் பழக்கமில்லையே. என் இஷ்டத்திற்கு வளவளவென்று எழுதியனுப்பிவிட்டேன். 'இதை உங்கள் நட்சத்திர வாரத்தின் முதல் பதிவாய்ப் போட்டுக்கொள்ளுங்கள்... அறிமுகம் சின்னதாய் இருக்கட்டும்' என்று மதி அவர்களிடமிருந்து பதில்! வளவளன்னு எழுதாம சுருக்கித்தா என்பதை டீசண்டாக கேட்கிறார்கள் என நினைத்து,முதலில் எழுதியதையே கொஞ்சம் வெட்டி, ஒட்டி, சுருக்கி அனுப்பினேன். முதலில் எழுதியது நிஜமாவே நல்லா இருந்தது என்றும், அதை சுருக்காமல் அப்படியே முதல் பதிவாய் போடுங்கள் என்றும் மீண்டும் அவரிடமிருந்து பதில்! 'நிஜமாவேவா..?!' என்ற ஆச்சர்யத்துடன் ரொம்ப சுருக்கமாக அறிமுகவரிகள் எழுதியனுப்பிவிட்டேன். அதனால், இப்போது அவரின் பரிந்துரைப்படி முதல் பதிவாய் என் சொந்தக்கதை... :)

ந்தந்த வயதில் கிடைக்கவேண்டியவை, எந்த பிரச்சனையும் இல்லாமல், இலய்பாகவே கிடைத்துவிட்ட மிகச்சாதாரண வாழ்க்கை என்னுடையது. இருப்பினும், எங்கே ஆரம்பித்தது எனத்தெரியாமல், எனது எண்ணங்களும், ஒவ்வொரு விஷயத்தின் மீதான எனது தீர்மானங்களும்(!) நானே அதிர்ச்சிக்குள்ளாகும்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன. இந்த அதிர்வுகளைப் பகிர்ந்துகொள்ள எழுந்த ஆர்வமே நான் எழுத ஆரம்பித்திருப்பதற்குக் காரணம்!

தந்தை ஒரு அரசுக்கல்லூரி நூலகர் என்பதாலேயே, கோகுலம் மற்றும் பூந்தலிரிலிருந்து எல்லா பத்திக்கைகளும் தடையின்றி வாசிக்கக் கிடைத்தது என் பாக்கியம்.

பள்ளிப்பருவம் கடலூர் St. Joseph's-ல். இளங்கலை அறிவியல் மயிலாடுதுறை AVC கல்லூரியில். முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் சென்னை Crescent Engg. -ல். இப்படி மூன்று மதங்கள் சார்ந்த கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பும் எத்தேச்சையாகவே அமைந்தது! இதில் நான், என்னில் பெரிதும் மாற்றம் கண்டது AVC கல்லூரியில் தான். அங்கு நாங்கள் நடத்திய மாணவர்கள் இதழான 'இளந்தூது'வும், அக்கல்லூரியின் நுண்கலை மன்றமும், முதன் முதலாய் கிடைத்த ஹாஸ்டல் வாழ்கையும் என் மற்றங்களுக்கு முக்கிய காரணங்கள்.

இலட்சியங்கள் என்று எதையும் வைத்துக்கொள்ளாமல், வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, அந்தந்த நிமிடங்களை முழுமையாய் அனுபவிக்க நினைப்பவன் நான். சின்னவயதிலிருந்தே business தான் செய்யவேண்டும் என்ற என் ஆசை, MCA படித்தபின் வேலைக்குப் போவதே சரி என்றிருந்த சூழலில், எந்த ஏமாற்றமும் இல்லாமல் மாறிப்போனதற்கும்; பின் வேலைக்குப் போய் lay-off ஆன சமயத்தில், அதே துறையில் தனாகவே கிடைத்த business வாய்ப்பை மறுதலிப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான பக்குவத்தை, மெற்சொன்ன என் வாழ்க்கை முறையே கொடுத்தது.

அடையாளங்கள் நம் ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கு தடையாய் இருப்பதை உணர்ந்து தெளிந்ததால்; கணிப்பொறியாளன், இந்த ஜாதியைச் சேர்ந்தவன், இந்த மதத்தைச் சேர்ந்தவன், இந்தியன், எழுத்தாளன், ஆத்திகன், நாத்திகன்... போன்ற எந்த அடையாளமுமில்லாமல் இருக்கவே ஆசைப்படுகிறேன். 'இப்போது வாழ்வது வாழ்க்கையில்லை, நாம் இறந்தபின் வரலாற்றில் நிற்கும்படி வாழ்வதே வாழ்க்கை' என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை! ஏதாவது ஒரு லட்சியத்துடன்தான் வாழ்வேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு நான் பரிந்துரை செய்வது: 'வாழ்வின் லட்சியம் வாழ்ந்து தீர்ப்பதே!' :)

சொல்ல விரும்பும், ஓஷோ அவர்களின் கருத்து ஒன்று:

தட்டத்தேவையில்லை,
திறந்தே இருக்கிறது
கதவு!

55 comments:

- யெஸ்.பாலபாரதி said...

//இயக்குனர் பேரரசுவின் கதாநாயகிகள் போல் தமிழ்மணத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த என்னை, ஒரு வாரத்திற்கு, அதே இயக்குனர் பேரரசுவின் கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் கொடுத்து நட்சத்திரம் ஆக்கியிருக்கிறார்கள். மகிழ்வுடன் நன்றி!
//

:-)))))))))

மீண்டும் வாழ்த்துக்கள்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

///
நாம் இறந்தபின் வரலாற்றில் நிற்கும்படி வாழ்வதே வாழ்க்கை' என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை
///

எனக்கு இந்தக் கருத்தோடு உடன்பாடே இல்லை.

அருள் குமார் said...

பாலாவுகும், செந்தில் குமரனுக்கும் நன்றிகள்.

//எனக்கு இந்தக் கருத்தோடு உடன்பாடே இல்லை. //
செந்தில், நானும் சில வருடங்களுக்கு முன் இந்த கருத்துடன் உடன்படாமல்தான் இருந்தேன்! எல்லாம் வாழ்கை தந்த பாடங்களே :)

We The People said...

இயக்குனர் பேரரசுவின் கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு அடிச்சு ஆடுங்க அருள். கண்டிப்பா பேரரசுவின் போல இல்லாமல் இந்த வாரம் உண்மையிலேயே கலைநயமாய் போகும் தமிழ்மணத்தில் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் !!!

நாமக்கல் சிபி said...

அட! இந்த முறையும் நம்ம ஆளு!
பா.க.ச வின் தீவிர உறுப்பினர் வேறு!

வாழ்த்துக்கள் இப்போதைக்கு.

பதிவைப் படிச்சிட்டு அப்புறமா திரும்பி வருகிறேன்.

நாமக்கல் சிபி said...

நட்சத்திமாக ஜொலிக்க வாழ்த்துக்கள் அருள்!!!

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் அருள்

வடுவூர் குமார் said...

அருள்குமார்
நட்சத்திர- வாழ்த்துக்கள்

குழலி / Kuzhali said...

மச்சி சொந்த கதை சொல்றேன், சோகக்கதை சொல்றேன்னு என்னை இழுத்துடாதே ஆட்டத்துக்கு, உன் சொந்த கதையையும், சோகக்கதையையும், நீ வாங்குன பல்புகளையும் மட்டும் சொல்லு, உன் நண்பர்களின் கதை, அதுவும் குறிப்பாக கடலூர் நண்பர்களின் கதையெல்லாம் வேண்டாம், அதுவும் குறிப்பா உன் நண்பன் வாங்குன பல்பு கதையெல்லாம் வேண்டாம் சரியா, அடக்கி வாசி....

குழலி / Kuzhali said...

நீ நட்சத்திரமானதுக்கு வருத்தப்படுற ஒரே ஆள் நான் தான் போல.... இன்னும் ஒரு வாரத்துக்கு வயித்தில நெருப்பக்கட்டிக்கிட்டு இருக்கனும் போல....

அருள் குமார் said...

வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவர்க்கும் நன்றிகள்.

நாமக்கல் சிபி said...

//பின் வேலைக்குப் போய் lay-off ஆன சமயத்தில், அதே துறையில் தனாகவே கிடைத்த business வாய்ப்பை மறுதலிப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான பக்குவத்தை, மெற்சொன்ன என் வாழ்க்கை முறையே கொடுத்தது//

// 'வாழ்வின் லட்சியம் வாழ்ந்து தீர்ப்பதே!' //

என்னங்க இது? நானே வேறு பெயரில் எழுதுவது போல் இருக்கிறது!
அப்படியே என்னோடும் ஒத்துப் போகின்றனவே!

சரவணன் said...

வாழ்த்துக்கள் அருள்...

We The People said...

//அதுவும் குறிப்பா உன் நண்பன் வாங்குன பல்பு கதையெல்லாம் வேண்டாம் சரியா, அடக்கி வாசி..///

அருள் இந்த மாதிரி கோரிக்கையெல்லாம் ஏத்துக்காதீங்க. குழலி எஸ்கேப் ஆக பார்க்கிறாரு?!! விடாதீங்க. குழலிக்கு அந்த நந்தி கேரக்டர் மாதிரி ஏதாவது மேட்டர் இருக்கோ?? இப்புட்டு பயப்படறாரு??!!

அருள் குமார் said...

//நீ நட்சத்திரமானதுக்கு வருத்தப்படுற ஒரே ஆள் நான் தான் போல.... இன்னும் ஒரு வாரத்துக்கு வயித்தில நெருப்பக்கட்டிக்கிட்டு இருக்கனும் போல.... //

கவலைப்படாதே நண்பா... கல்யாணமானவர்களின் கவலைகள் தெரிந்தவன் நான். அப்படியெல்லாம் மாட்டிவிட்டுடமாடேன். நீ நிம்மதியாவே இருக்கலாம் :))

Sud Gopal said...

வாழ்த்துகள் அருள்.

இந்த வாரத்தில் கட்டுரைகள்,கவிதைகள் மட்டுமில்லாமல் நீங்க வரைந்த ஓவியங்களையும் தான் பதியுங்களேன்.

அருள் குமார் said...

//என்னங்க இது? நானே வேறு பெயரில் எழுதுவது போல் இருக்கிறது!
அப்படியே என்னோடும் ஒத்துப் போகின்றனவே! //

சந்தோஷமாய் இருக்கிறது சிபி :)

நன்றி சரவணன்.

ஷைலஜா said...

வாழ்த்துகள் அருள்குமார்!
ஷைலஜா

ரவி said...

வாழ்த்துக்கள் அருள்.

தருமி said...

congrats!

wish everybody to have a nice week.

//கல்யாணமானவர்களின் கவலைகள் தெரிந்தவன் நான்..// Oh! kuzhali kathai appadi pokuthaa..?

அருள் குமார் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே!

தருமி சார், குழலிக்கு மட்டுமா? அனேகமாக எல்லோருக்கும் இப்படி கதைகள் இருக்கும்தானே?! ;)

குழலி / Kuzhali said...

// குழலிக்கு மட்டுமா? அனேகமாக எல்லோருக்கும் இப்படி கதைகள் இருக்கும்தானே?! ;)
//
இப்படியே உசுப்பி உசுப்பி தான் ஒடம்பு ரணமா கெடக்குது இன்னுமா?

ஒரு முடிவோடத்தடான் வந்திருக்காரு போல தருமி....

துளசி கோபால் said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.

" அட! நீரா? வாய்யா சோப்பு" ன்னு எழுத ஆசைதான்.
நீங்க தப்பா நினைச்சுக்கிட்டா..?

ச்சும்மா...:-))))

ஜொள்ளுப்பாண்டி said...

வாழ்த்துக்கள் அருள் !!! கலக்குங்க !!

siva gnanamji(#18100882083107547329) said...

'வாழ்வின் லட்சியம் வாழ்ந்து தீர்ப்பதே'

நட்சத்திரப் பதிவு நன்றாகவே ஆரம்பம்.

வாழ்த்துகள்!

அருள் குமார் said...

நன்றி துளசியக்கா,

//" அட! நீரா? வாய்யா சோப்பு" ன்னு எழுத ஆசைதான்.
நீங்க தப்பா நினைச்சுக்கிட்டா..? //

இதுல தப்பா நினைச்சுக்க என்னங்க இருக்கு. இவ்ளோ உரிமை எடுத்துக்கறீங்களேன்னு சந்தோஷமாத்தான் இருக்கும் :)

ஜொள்ளுப்பாண்டி, சிவஞானம்ஜி ஐயா... வாழ்த்துக்களுக்கு நன்றி!

ப்ரியன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அருள் :)

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் அருள்...

மஞ்சூர் ராசா said...

தொடக்கமே கலக்கல்
பேரரசு ரொம்ப மட்டம்னு தெரியும். எடுத்துக்காட்டுக்கு போடும் அளவுக்கு வந்துவிட்டார் என்பதை நினைக்கையில்.....

அட வாழ்த்து சொல்லவந்துட்டு வேறெ எதையோ எழுதிகிட்டிருக்கோம்.

நண்பரே நட்சத்திர வாழ்த்துக்கள்.

வெற்றி உண்டாகட்டும்.

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அருள் :-)

அருள் குமார் said...

//எடுத்துக்காட்டுக்கு போடும் அளவுக்கு வந்துவிட்டார் என்பதை நினைக்கையில்.....//

இப்படிச் சொன்னால் எளிதில் புரியுமே என்று சொன்னேன்.

மற்றபடி, எடுத்துக்காட்டில் நான் சொல்லியிருக்கும் விஷயமே அவர் படங்களின் தரம் பற்றிச் சொல்லிவிடுமே மஞ்சூர் ராசா :)

மேலும் வாழ்த்து சொன்ன நண்பர்களுகு நன்றி!

சின்னக்குட்டி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

ramachandranusha(உஷா) said...

அருள், ஓஷோவின் வரிகள் அற்புதம்.

G.Ragavan said...

அடடே! நம்ம அருள்தானா இந்த வார நட்சத்திரம். ஆவல் கூடுதப்போய். நல்லா கலக்கோ கலக்குன்னு கலக்கனும். தொறந்திருக்குற கதவு வழியா லேசா மழைச்சாரல் அடிக்கனும். சரியா?

படமெல்லாம் கேக்குறாரு ஓமப்பொடி...கொஞ்சம் கண்ணுல காட்டுறது.

இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.

அருள் குமார் said...

சின்னக்குட்டி, உஷா மற்றும் ராகவனுக்கு நன்றிகள்.

//நல்லா கலக்கோ கலக்குன்னு கலக்கனும். // ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சிக்கிறேன் ராகவன் :)

thiru said...

வாழ்த்துக்கள் அருள்! உங்க எண்ணங்களை, அனுபங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்... குழலி கவலைபடமாட்டார். சும்மா சொல்லுங்க :)

அருள் குமார் said...

நன்றி திரு.

//குழலி கவலைபடமாட்டார். சும்மா சொல்லுங்க :)//

கவலைப்பட்டா கூட பரவாயில்லைன்னு சில விஷயங்களைச் சொல்லலாம்னு நினைக்கிறேன்... பாக்கலாம் ;)

தருமி said...

//நீ வாங்குன பல்புகளையும் மட்டும் சொல்லு,..//

ஆமா...இந்த பல்பு..பல்பு அப்டிங்கிறீங்களே..அப்டின்னா என்னன்னு கொஞ்சூண்டு நோட்ஸ் போட்டுருங்களேன்.

அருள் குமார் said...

//ஆமா...இந்த பல்பு..பல்பு அப்டிங்கிறீங்களே..அப்டின்னா என்னன்னு கொஞ்சூண்டு நோட்ஸ் போட்டுருங்களேன். //

தருமி சார், விட்டா 'நான் எப்படியெல்லாம் பல்பு வாங்கினேன்'-னு ஒரு தொடர்பதிவே நீங்க எழுதுவீங்கன்னு எங்களுக்குத்தெரியும். நீங்களே இப்படிச் சொன்னா எப்படிங்க?! :)

Santhosh said...

வாழ்த்துக்கள் அருள்.

Boston Bala said...

கலக்கல் துவக்கம்.

Sivabalan said...

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

gulf-tamilan said...

வாழ்த்துக்கள் !!!

வெளிகண்ட நாதர் said...

நட்சத்திர நாயகனுக்கு வாழ்த்துக்கள்!

அருள் குமார் said...

சந்தோஷ், பாலா மற்றும் சிவபாலன், gulf-tamilan, வெளிகண்ட நாதர்... இவர்களுக்கு என் நன்றிகள்.

மலைநாடான் said...

//வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, அந்தந்த நிமிடங்களை முழுமையாய் அனுபவிக்க நினைப்பவன் நான்//

அருள்குமார்!
இந்த வரிகளே எனது வாழ்வியலும். அந்தவகையில் நெருக்கமாகியுள்ளோம். நட்சத்திரவாரத்திற்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்! உங்கள் எளிமையான மற்றும் தங்குதடையில்லாத எழுத்துநடை அருமை. இந்த "சொந்தக்கதை" பதிவின் முதல் இரண்டொரு பத்திகளில் அது பளிச்சிடுகிறது!

நண்பர் (ப்ரியன்) விக்கியின் அறிமுகத்தால் உங்கள் கவிதைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். தொடருங்கள்...

Anonymous said...

நல்லவேள பேரரசு மாதிரி வந்தேன்னு சொல்லாம நெஞ்சில பால வார்த்தீங்க:-))

இன்பா (Inbaa) said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

மு.கார்த்திகேயன் said...

//இயக்குனர் பேரரசுவின் கதாநாயகிகள் போல் தமிழ்மணத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த என்னை, ஒரு வாரத்திற்கு, அதே இயக்குனர் பேரரசுவின் கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் கொடுத்து நட்சத்திரம் ஆக்கியிருக்கிறார்கள். மகிழ்வுடன் நன்றி!
//

நல்ல உவமை அருள்குமார்!

வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

//நல்லவேள பேரரசு மாதிரி வந்தேன்னு சொல்லாம நெஞ்சில பால வார்த்தீங்க:-)) //

நான் போட்ட இடுகை தான் அநானியில் போய்விட்டது:-(

நட்சத்திர வாழ்த்துக்கள்

அருள் குமார் said...

//இந்த வரிகளே எனது வாழ்வியலும்.//
இனிது மலைநாடான். வாழ்த்துக்களுக்கு நன்றி.

சேதுக்கரசி,
பராட்டிய உங்களுக்கும், அறிமுகம் செய்த ப்ரியனுக்கும் நன்றிகள்.

இன்பா, காஅர்த்திகேயன், கானா பிரபா ஆகியோர்க்கும் என் நன்றிகள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் அருள்.

MCA படிக்கும் போது உன்னுடைய "போட்டு தாக்கு" (வார வெளியிடு) தான் என் நினைவுக்கு வருகிறது.

"சிறு துளி பெறு வெள்ளம்"

- ஷஃபி

அருள் குமார் said...

ஹே..! ஷஃபி, வாடா வா. நீயும் ஜோதியில கலந்திட்டியா... வா வா...:)

வாழ்த்துக்கு நன்றி!

நாகை சிவா said...

// 'வாழ்வின் லட்சியம் வாழ்ந்து தீர்ப்பதே!' :)//

நாளைய வரலாறு உங்கள் தத்துவத்தை உலகுக்கு சொல்லட்டும் :-)

நட்சத்திர வாழ்த்துக்கள்