Wednesday, January 24, 2007

தமிழினக்காவலர்கள் இதையெல்லாம் கேட்க மாட்டார்களா?

போக்கிரி திரைப்படத்தில், IPS அதிகாரியான விஜய், தாதாக்களை ஒழிக்க தானே ஒரு தாதாவாக உருவெடுக்கிறார். பணம் கொடுத்தால் யாரைவேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் ஒரு இமேஜை தனக்கு உருவாக்கிக்கொண்டு, தாதாக்கள் கூட இருந்தே அவர்களுக்குக் குழிபறிக்கும் பாத்திரம் அவருக்கு. அந்த போக்கிரி தாதா கேரக்டருக்கு தேர்தெடுக்கப்பட்டிருக்கும் பெயர் "தமிழ்"! அவரே போலீஸ் அதிகாரியாக வரும்போது அவரின் பெயர் வெறு. தாதா இமேஜ் கேரக்டர் என்றாலே இப்படித்தான் பெயர் வைக்க வேண்டுமா?

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வில்லன்களின் பெயர்கள் நல்ல தமிழ்ப்பெயர்களாக இருந்தாலே கொதித்தெழும் தமிழினக் காவலர்கள் இதையெல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை! ஒருவேளை கமலஹாசன் இப்படிச் செய்தால் மட்டுமே கேட்பார்களோ என்னவோ ?!

12 comments:

G.Ragavan said...

நியாயமான கேள்வி.

போக்கிரி ஒரு மகாமட்டமான படம். லாஜிக்கே இல்லாம வந்திருக்குற ஒரு படம். ஒரு காட்சி சொல்றேன் கேளுங்க. டீவியில அடிக்கடி போடுறாங்களே. அசின் கையில கிழிச்சிரும். ஆஸ்பித்திரிக்குக் கூட்டீட்டுப் போவாரு. அதுவும் எப்படி...நேரா டாக்டர் கிட்ட கூட்டீட்டுப் போவாரு. வழக்கமா எல்லாரும் ரிசப்ஷன்ல கேப்பாங்க. இவரு வழியில வர்ர டாக்டர மடக்குவாரு. ஹீரோல்ல. அப்படித்தான் செய்யனும். ஒடனே அந்த டாக்டரும் போலீஸ் கேஸ் பதியனும்னு சொல்வாரு. ஒடனே இவரு பிளேடால அந்த டாக்டரக் கீறீட்டு போலீஸ் கிட்ட போகலாம் வான்னு சொல்வாரு. ஒடனே டாக்டர் திருந்தீருவாராம்.

இதுல என்ன கொடுமைன்னா...எல்லா பெரிய ஆஸ்பித்திரியிலயும் அங்கயே போலீசுக்குக் கொடுக்குற பார்ம் வெச்சிருக்காங்க. நம்ம அத பூர்த்தி செஞ்சி குடுத்தாப் போதும். இதுதான் எதார்த்தம். அத விட்டுட்டு....யோவ் டைரடக்கரு....ஆடும் போது வெடுக்குவெடுக்குன்னு ஒடம்பு ஒரு பக்கமாப் போகும். படம் எடுக்கும் போதும் இப்படித்தான் எடுக்கனுமா? சொந்தமா ஒரு கத வெச்சி எடுத்தான்ன. தெலுங்குல இருந்து காப்பி வேற. இதுல விஜயக்குத் தமிழ்னு கூட சொல்ல வராது. தமிள்ள்ள்ள் தான். படம் எடுக்குறாங்களாம். படம். அடப் போங்கய்யா நீங்களும் ஒங்க படமும். தாங்க முடியலைங்க. இதுக்கு விட்டலாச்சாரியா படங்கள் எவ்வளவோ தாவலை.

பத்மகிஷோர் said...

வில்லனுக்கு தமிழ் பேர் வெச்சா படம் நல்லா ஓடும்னு சென்டிமென்டாக்கூட (!) இருக்கலாம்.
முன்னல்லாம் நஞ்சப்பன் , முனியாண்டினு பேர் வெச்சாங்க.. இப்போ தமிழ் பேர் வெக்கற ட்ரெண்டு.
அவ்வளவுதான்.

அருள் குமார் said...

ராகவன்,
இப்படியெல்லாம் லாஜிக் பாத்தா இந்தப்படத்தப்பத்தி ஒரு தொடர் வலைப்பதிவே எழுதலாம் :)

//இதுல என்ன கொடுமைன்னா...எல்லா பெரிய ஆஸ்பித்திரியிலயும் அங்கயே போலீசுக்குக் கொடுக்குற பார்ம் வெச்சிருக்காங்க. நம்ம அத பூர்த்தி செஞ்சி குடுத்தாப் போதும். இதுதான் எதார்த்தம்.//

இதவிடக் கொடுமை, ஒரு IPS அதிகாரிக்கு இது தெரியாமப்போனது :)))

பத்மகிஷோர்,
நீங்க சொல்றது சரிதான். ஆனா 'வேட்டையாடு விளையாடு' படம் வந்தப்போ இப்படி எல்லோராலையும் எடுத்துக்க முடியலையே!

ஜோ/Joe said...

//ஒருவேளை கமலஹாசன் இப்படிச் செய்தால் மட்டுமே கேட்பார்களோ என்னவோ ?!//
ஆமாங்க! இது மட்டும் உண்மை!

குழலி / Kuzhali said...

//பத்மகிஷோர்,
நீங்க சொல்றது சரிதான். ஆனா 'வேட்டையாடு விளையாடு' படம் வந்தப்போ இப்படி எல்லோராலையும் எடுத்துக்க முடியலையே!
//
பத்மகிஷோர் தான் அந்த எல்லோருமா? சட்டுனு எல்லோரும் என்று பொதுமை படுத்திவிட்டாயே!!!

இப்போது பிரச்சினை என்ன? தமிழ் பெயரை இப்படி வைக்கிறார்களே என்ற ஆதங்கமா? கமல் வைக்கும்போது பிரச்சினை செய்கிறார்களே என்ற எரிச்சலா? இங்கே கமல் வைக்கும்போது மட்டும் என்று போடாததன் காரணம் இது மாதிரி பிரச்சினைகளில் சரத்குமாரும் மாட்டியிருக்கிறார், படம் 'மாயி' எதிர்ப்பு தெரிவித்தவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி....

திரைப்படத்துறையினரும் அரசியல்வாதிகளும் இது மாதிரி பல இடங்களில் மோதியுள்ளனர், கமல் என்றால் சத்தம் அதிகமாக பதிவு செய்யப்படுகிறது ஊடகங்களில், சத்தம் அதிகமாக பதிவுசெய்யப்படுகிறதேயென இன்னும் குரல் எடுத்து பதிவுசெய்கிறார்கள் எதிர்ப்பவர்கள்...

அருள் குமார் said...

//இப்போது பிரச்சினை என்ன? தமிழ் பெயரை இப்படி வைக்கிறார்களே என்ற ஆதங்கமா? //

அப்படியெல்லாம் எந்த ஆதங்கமும் எனக்கு இல்லை! எல்லா மொழி சார்ந்தவர்களிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு!

//கமல் வைக்கும்போது பிரச்சினை செய்கிறார்களே என்ற எரிச்சலா? //

ஆமாம்... எரிச்சல் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.

லக்கிலுக் said...

டாக்டர் கமல்ஹாசன் வாழ்க ;-)

- யெஸ்.பாலபாரதி said...

அது சரி...

Anonymous said...

simple reason samy, Vijai is a Tamil, Dr.Kamal is not.

- யெஸ்.பாலபாரதி said...

தங்களின் கேள்வி நியாயமானது அருள்குமார், அதே சமயம் கமல்ஹாசன் செய்கிறார் என்பதற்காக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. மற்ற நடிகர்களை விட நாம் அவரிடம் தான் சமூக அக்கரையைப் பார்க்கிறோம். அவ்வளவே! அதனால் அந்த படத்தின் இயக்குநரிடம் கேட்க கமலை வழியாக பயன்படுத்துகிறார்கள்.

தாய்மொழியை மறை முகமாக இழிவு படுத்தும் யாருமே கண்டிப்புக்கு ஆட்பட வேண்டியவர்கள் தான்.

பழைய படங்களில் கூட நாட்டார் தெய்வங்களின் பெயர்களை அடியாட்களுக்கு கொடுப்பார்கள்.

ஏங்கே எத்தனை படங்களில் உயர் இந்து சாமிகளில் பெயர்கள் வில்லன்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது சொல்லுங்கள். எனக்கு நினைவு தெரிந்து அப்படி இல்லை.(ராமன், கிருஷ்ணன்,வெங்கடாஜலபதி, இப்படி)

ஆரம்பிச்சு வச்சுட்டேன். இனி சதம் தான்!

Anonymous said...

கடந்த பத்து ஆண்டுகளில் என்கவுண்டர் மூலம் கொலைசெய்யப்பட்ட ரவுடிகளின் பெயர்களைக் கேட்டால் உங்களுக்கு புரியும்.

உதாரணத்திற்கு இதோ
1, கபிலன்
2, பூபாலன்
3, தென்றல்மோகன் (மதுரை)
4, வீரமணி

இப்பதான் ரவுடிகளெல்லாம் ஸ்டைலாக பெயர்களை அடைமொழியுடன் (மாட்டு சேகர், பங்க் குமார்) வைத்துக்கொள்கின்றனரே. பிரபுதேவாவிற்கு இது கூடவா தெரியாது. வடிவேலுகிட்டெ கேட்டிருந்தா கூட சில பெயர்கள் சொல்லியிருப்பாரப்பா?

அருள் குமார் said...

யாழிசைச்செல்வன்,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

//அதே சமயம் கமல்ஹாசன் செய்கிறார் என்பதற்காக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. //

கமல்ஹாசன் செய்கிறார் என்பதற்காக ஏற்ருக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. கமல்ஹாசன் என்ன செய்தாலும் அதை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டாமே என்கிறேன். உண்மையான நோக்கம் தமிழ்தான் என்றால் இப்போதும் அவர்கள் கேட்க வேண்டாமா என்கிறேன்.

//ஏங்கே எத்தனை படங்களில் உயர் இந்து சாமிகளில் பெயர்கள் வில்லன்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது சொல்லுங்கள். எனக்கு நினைவு தெரிந்து அப்படி இல்லை.(ராமன், கிருஷ்ணன்,வெங்கடாஜலபதி, இப்படி)//

என்னதான் மிகைப்படுத்தல்கள் இருந்தாலும், நாம் தினசரி காணும் சமூக அமைப்பின் பிம்பங்கள்தான் திரைப்படங்களின் களங்களாக இருக்கின்றன. ஒரு அடியாள் பாத்திரத்திற்கு ராமன், கிருஷ்ணன், வெங்கடாஜலபதி என்று பெயர்வைத்தால் அந்த இயக்குனரை கிண்டல் செய்து நீங்களே ஒரு பதிவு எழுதினாலும் எழுதுவீர்கள்.

அதற்காக நீங்கள் குறிப்பிட்ட பெயர்களை நல்ல பாத்திரத்திற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்றும், தமிழ்ப்பெயர்களை மோசமான பாத்திரங்களுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

உதாரணத்திற்கு, பார்த்தசாரதி என்ற பெயருக்கென்று ஒரு பிம்பம் இருக்குறது நம் தமிழ் சினிமாக்களில். இப்படி பல உதாரணங்களைச் சொல்லமுடியும். அதே போன்று நல்ல தமிழ்ப்பெயர்கள் எவ்வளவோ நல்ல பாத்திரங்களுக்கும் வைக்கப்படுகின்றன.

மேலும், அனானி நண்பர் குறிப்பிட்டபடி, நம் சமூகத்தில் நாம் அறிந்த உண்மையான தாதாக்களின் பெயர்கள் ஏற்படுத்தியிருக்கும் பிம்பங்களும் ஒரு காரணம்.