Thursday, February 15, 2007

எம்பாட்டு எம்பாட்டு...

காலேஜ்ல நடிக்கறதுக்கு, கவிதை படிக்கறதுக்கெல்லாம் கெடச்ச மேடை பாட மட்டும் கெடைக்கவே இல்லை. இது ரொம்ப நாளா ஒரு ஏக்கமாவே இருந்திச்சி. எப்பவாச்சும் டி.வி ல மோகன், முரளி எல்லாம் மேடைல படறத பாத்தா இந்த ஏக்கம் திரும்பவும் அப்பப்ப தலைதூக்கும்.

நம்ம சர்வேசனோட பாட்டுக்குப் பாட்டு அறிவிப்பு பாத்ததும், ஆஹா... நமக்கும் கெடச்சுதுடா ஒரு எடம்னு பூந்து பாடி வெச்சிட்டேன்... நம்ம மொட்ட பாட்டுல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு. அத இப்படி கொல பண்ணியிருக்க வேணாம்தான்... ஆனாலும் ஆச யார விட்டுது!

இங்க என் பாட்டு...

ennulle.wav


இனி உங்க பாடு!

7 comments:

ஷைலஜா said...

அட! அருமையா பாடி இருக்கீங்களே அருள்!
ஷைலஜா

SurveySan said...

சூப்பருங்க உங்க பாட்டு..

:)

SurveySan said...

ஆனா என்ன, உங்களுக்கு டோக்கன் இல்லாம entry போட்டதுக்கு நான் தான் வாங்கிக் கட்டிக்கிட்டேன் :)

அருள் குமார் said...

நிஜமாவாங்க?!
நன்றி ஷைலஜா.

நன்றி சர்வேசன்.

//ஆனா என்ன, உங்களுக்கு டோக்கன் இல்லாம entry போட்டதுக்கு நான் தான் வாங்கிக் கட்டிக்கிட்டேன் :) //

அய்யய்யோ... சாரிங்க. உங்க சார்பா நானும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.

Hari said...

நல்லா இருக்குங்க.

அருள் குமார் said...

நன்றி ஹரி :)

ச.பிரேம்குமார் said...

அருள், யாரை நினைச்சுக்கிட்டே இந்தப் பாட்ட பாடினீங்க? நல்லாவே வந்திருக்கு பாட்டு. ஆனா பாதியிலேயே நின்னு போச்சு :(