Monday, August 21, 2006

வலைப்பதிவர் சுற்றுலா - 6

வலைப்பதிவர் சுற்றுலா - 1 : வீரமணி
வலைப்பதிவர் சுற்றுலா - 2 : ப்ரியன்
வலைப்பதிவர் சுற்றுலா - 3 : பாலபாரதி
வலைப்பதிவர் சுற்றுலா - 4 : மா. சிவகுமார்
வலைப்பதிவர் சுற்றுலா - 5 : சிங். செயகுமார்

டிக்கடி சென்று பார்த்த இடங்கள் கூட, புதிய நண்பர்களுடன் சென்று பார்க்கையில் சற்று வித்தியாசமாய்த்தானிருக்கின்றன. மகாபலிபுர சிற்பங்கள் எத்தனை முறை பார்த்தும் அலுக்காதவை. அதிலும், புதிய நண்பர்களுடனான புதிய பார்வையில் வித்தியாசமாய் இருந்தது.

அந்திமயங்கும் வேளையில் கடற்கரைக் கோயிலைப் பார்க்க விரும்பி, ஐந்து ரதம் பார்த்துவிட்டுப் பின்னர் அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம். ஐந்து ரதம் பகுதியிலும் நல்ல கூட்டம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நிறைய. ஒரு ரதத்தின் உள் நின்றபடி, ஒரு கைடு, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். என்ன புரிந்ததோ தெரியவில்லை, அந்த வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஐந்து ரதம் என்றதும், குப்புசாமி, நம்ம வள்ளுவர் கோட்டம் தேர்மாதிரி சக்கரமெல்லாம் வைத்திருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார் போலும். "எதுங்க ரதம்..?" என்று கேட்டுக்கொண்டே வந்தார். நாங்கள் காண்பித்தவற்றை ரதமாக அவரால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அவற்றின் கலையழகை ரசித்தார்.

(பாலா, ஜெய்சங்கர், நான், வீரமணி, சிவகுமார், குப்புசாமி)

அங்கங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். நிறைய புகைப்படங்கள் அங்கிருந்த பெரிய யானை சிலை அருகேதான். அந்த சிலையைப் பார்த்ததும் ஆளாளுக்கு துளசி அக்காவையும், பொன்ஸக்காவையும் தன்னிச்சையாய் நினைவு கூர்ந்தார்கள்.

"frame ல இன்னோரு யானை மறைக்குதுப்பா..."

"ஹை.. ஒரு சிலை யானை, ஒரு நிஜ யானை..."

"இந்த யானை பக்கத்துல யாராச்சும் வந்து நில்லுங்களேன்... எல்லாரும் ஒரு யானை பக்கத்துலயே போய் நிக்கறீங்க..?!"

-போட்டோவுக்காக யானை சிலை பக்கத்தில் வந்து நின்ற ஜெய்ஷங்கரைப் பார்த்துதான் இந்த கமென்ட்ஸ்!

காலையில் நடேசன் பார்க்கில் முதல் புகைப்படமெடுக்கும்போதே, 'எடுக்கறதுக்கு முன்னாடி ரெடின்னு சொல்லுங்கப்பா... நாங்க வயித்த உள்ள இழுக்கணும்...' என்று ஜெய்ஷங்கர் சொன்னது பலருக்கும் உபயோகமாக இருந்ததால், அன்று முழுக்க அப்படியே செய்யப்பட்டது. 'ரெடி' என்று சொல்வதற்கு பதிலாக 'வயித்த எக்குங்க...' என்றே சொல்ல ஆரம்பித்திருந்தோம். ஃபோக்கஸ் செய்ய கொஞ்ச நேரம் ஆனாலும் போதும் 'சீக்கிரம்பா... சிலருக்கு மூச்சு நின்னுடும் போலருக்கு...' என்று கிண்டல் வேறு. நல்ல வேளையாக எனக்கும் சிவகுமாருக்கும் இந்தப் பிரச்சனை இல்லை ;)

(கண்ணன், ஜெய்சங்கர், சிங்.செயகுமார், சிவகுமார், குப்புசாமி, நான், பாலா)

ரதங்களின் இடதுபுறம் சற்று மேலேறிச்சென்றால், ஒரு ரம்மியமான புல்வெளி. நன்றாக பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக புல்வெளியில் நடக்கவோ, அமர்ந்துகொள்ளவோ அனுமதிப்பதில்லை. 'அப்புறம் எதற்கு இந்தப் புல்வெளி...?!' என்று மனதில் எழுந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை! வேலிக்கு அருகிலிருந்த மரத்தடியில் நின்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா இடத்திலும் சொல்லிக்கொண்ட மாதிரி, 'இங்கல்லாம் கொஞ்சம் டைம் எடுத்து வரணும்...' என்று இங்கும் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.

(நான், ஜெய் மற்றும் புல்வெளி)

வெளியில் வந்ததும், ஐந்து ரத சிற்பங்கள் பார்த்த பிரமிப்பிலும், கடற்கரைக் கோயிலைப் பார்க்கும் ஆர்வத்திலும்; சிவகுமார் தன் 'பைக் பார்ட்னர்' பாலாவை மறந்து விட்டுவிட்டு கிளம்பிவிட்டார். புலம்பிக்கொண்டிருந்த பாலாவை, போனால் போகிறதென்று என் வண்டியில் ட்ரிபில்ஸ் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். சற்று தூரத்தில், சிரித்தபடியே 'சாரி.. சாரி...' என்று சொல்லிக்கொண்டு சிவகுமார் திரும்பிவந்தார். 'ஏய்யா... எட்டு பேர் வந்தமே... ஒருத்தன் என்ன ஆனான்னு கூட யோசிக்கமாட்டீங்களா...' என்று ஆரம்பித்த பாலாவின் புலம்பல்களை சிரித்தபடியே மன்னிப்பு கூறி ஏற்றுக்கொண்டார் சிவகுமார்.

கடற்கரைக் கோயில் அனுபவங்களை ஜெய்சங்கர் சொல்கிறார்...

வலைப்பதிவர் சுற்றுலா - 7 : ஜெய்சங்கர்
வலைப்பதிவர் சுற்றுலா - 8 : குப்புசாமி செல்லமுத்து

16 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல ரிலே தொடர். நான் படிச்சவரை ஆறோட நிக்குது.

புகைப்படங்களில் நம்ம ஊரைக் காட்டியதற்குப் பிரத்தியேக நன்றிகள்.

சென்னையிலிருக்கும் தமிழ் வலைப்பதிவாளர்கள் புகைப்படங்களுக்கென்று ஒரு கூட்டு வலைப்பதிவு வைத்து, என்னை மாதிரி ஆட்களை அப்பப்ப காதில் புகை வருமாறு செய்யலாமில்லையா? என்ன சொல்றீங்க? நினைச்சா, சென்னைக்கென்றே ஒரு தனிப்பதிவுகூடத் தொடங்கலாம். ;)

புகைப்படங்களில் இருப்பவர்களில் ஓரிருவரை அடையாளம் காண முடிகிறது. கொஞ்சம் பெயர் போட்டிருக்கலாமே.

சுவாரசியமான அனுபவம் - எங்களுக்கும்.

அருள் குமார் said...

நன்றி மதி :)

//நான் படிச்சவரை ஆறோட நிக்குது.//
7ம் வந்தாச்சு. மொத்தம் 8. அதுவும் வந்துகிட்டே இருக்கு :)

அருள் குமார் said...

மதி அவர்கள் சொன்னபடி புகைப்படங்களின் கீழ் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன...

//தோடா சைக்கிள் கேப்பில் புல்டோசர் ஓட்டரத// அதுக்காக புல்டோசன்லம் ரொம்ப ஓவர்ங்க... ஒரு ஆட்டோவோ காரோன்னு வேணும்னா சொல்லலாம். சரிதானே... :)

G.Ragavan said...

எல்லாஞ் சரி....ஆன பக்கத்துல நின்னு படம் எடுத்தது நீங்க. அந்த ஆனையோட தந்தத்த எடுத்தது யாரு? உண்மையச் சொல்லீருங்க....

எட்டு பேரும் இருக்கீங்களான்னு எப்படிக் கண்டு பிடிக்கனும்னு தெரியும்ல? ;-)

- யெஸ்.பாலபாரதி said...

//எல்லாஞ் சரி....ஆன பக்கத்துல நின்னு படம் எடுத்தது நீங்க. அந்த ஆனையோட தந்தத்த எடுத்தது யாரு? உண்மையச் சொல்லீருங்க....//

கேள்வி பார்வேர்ட் டூ பொன்ஸ் அக்கா..

அருள் குமார் said...

//அந்த ஆனையோட தந்தத்த எடுத்தது யாரு? உண்மையச் சொல்லீருங்க....//

:))

//எட்டு பேரும் இருக்கீங்களான்னு எப்படிக் கண்டு பிடிக்கனும்னு தெரியும்ல? ;-) //

ராகவன் நீங்க என்ன சொல்றீங்கன்னு மத்தவங்களுக்கு புரியனும்னா, சீக்கிறமே 'கூத்துப்பட்டரையின் பரமார்த்தகுரு' நாடகம் பத்தி நீங்க எழுதனும் :)

பொன்ஸ்~~Poorna said...

கடைசி வரை யானை எனக்குத் தெரியலை.. வேற நல்ல புகைப்படம் இருக்கா - யானையை மட்டும் தனியா எடுத்தது? ;)

//'அப்புறம் எதற்கு இந்தப் புல்வெளி...?!' //
அதானே!!

//'ஏய்யா... எட்டு பேர் வந்தமே... ஒருத்தன் என்ன ஆனான்னு கூட யோசிக்கமாட்டீங்களா...'//
பயந்தான்.. வீரமணி காதைக் கடிச்சிருப்பாரு..;)


மேலேரிச்சென்றால் => ஏறி ?
வேளியில் =>வெளியில்?
[ம.சா: குறை சொல்ல வந்துடுவீங்களே.. ]

அருள் குமார் said...

// வேற நல்ல புகைப்படம் இருக்கா - யானையை மட்டும் தனியா எடுத்தது? ;)// இருங்க பொன்ஸ், ஜெய் கிட்ட கேட்டு அவரோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வாங்கித்தரேன் ;)

அப்புறம் நீங்க சொன்ன, சொல்லாத எழுத்துப்பிழைகளை நீக்கியாச்சு :)

நன்றி.

நாகை சிவா said...

அருள்!
நல்ல இனிமையான சந்திப்பு. அதை தந்த விதம் மிகவும் அருமை.
வாழ்த்துக்கள்.

We The People said...

//"ஹை.. ஒரு சிலை யானை, ஒரு நிஜ யானை..."//

// 'எடுக்கறதுக்கு முன்னாடி ரெடின்னு சொல்லுங்கப்பா... நாங்க வயித்த உள்ள இழுக்கனும்...' என்று ஜெய்ஷங்கர் சொன்னது பலருக்கும் உபயோகமாக இருந்ததால்//

அருள் போட்டுதள்ளீட்டீங்களே!... நம்ம மேட்டர் இப்படி விளம்பரம் பண்ணிட்டீங்களே!! :(

பரட்டை இது நல்லவே இல்ல...

அருள் குமார் said...

//நல்ல இனிமையான சந்திப்பு.// ஆமாம் சிவா. மறக்க இயலாத சந்திப்பு.

ஜெய், பதிவுல மட்டும்தான் கவனிச்சீங்களா? பின்னூட்டமெல்லாம் பாருங்க ;)

மதுமிதா said...

நல்லாவே எழுதியிருக்கீங்க அருள்
தொடராட்டம் சுவாரஸ்யமா போயிட்டிருக்கு

///
அடிக்கடி சென்று பார்த்த இடங்கள் கூட, புதிய நண்பர்களுடன் சென்று பார்க்கையில் சற்று வித்தியாசமாய்த்தானிருக்கின்றன
///

தினம் நடக்கும் பூங்கா தான். ஆகஸ்ட் 15 வித்தியாசமாகத்தான் இருந்தது அருள்

அருள் குமார் said...

//தினம் நடக்கும் பூங்கா தான். ஆகஸ்ட் 15 வித்தியாசமாகத்தான் இருந்தது அருள் //
சரியான உதாரணம் சொன்னீர்கள் மதுமிதா :)

துளசி கோபால் said...

அருள் மொதல்லே இப்படிக் கையைக் கொடுங்க. ஓடிஓடித்
தேடவிடாமச் சுட்டிகளைக் கொடுத்தீங்களே அதுக்கு!

நான் அங்கே இல்லேன்னாலும் என் நினைப்பு வந்துருக்குன்னு பார்த்ததும்
ஒரு குஷி வந்துச்சு. அதுக்குத்தானே அந்தக் கல்யானையை
அங்கே விட்டுவச்சிட்டு வந்தேன்:-))))

அருள் குமார் said...

துளசியக்கா, உங்க நினைப்பு இல்லாமப் போகுமா?

//அதுக்குத்தானே அந்தக் கல்யானையை
அங்கே விட்டுவச்சிட்டு வந்தேன்:-)))) //

யானையை விட்டு வச்சிட்டீங்க.. ஆனா அதோட தந்தத்தை?!!!

//அந்த ஆனையோட தந்தத்த எடுத்தது யாரு? உண்மையச் சொல்லீருங்க....//

ராகவன் உங்க கேள்விக்கு இங்கே பதில் இருக்குன்னு நினைக்கிறேன் :))))

துளசி கோபால் said...

என் யானை அது பெண் யானை:-)))