Wednesday, May 24, 2006

வலைப்பதிவு ஆய்விற்காக...

மதுமிதா அவர்களின் வலைப்பதிவு ஆய்விற்காக...

வலைப்பதிவர் பெயர்: அருள்குமார்

வலைப்பூ பெயர்:
உணர்வின் பதிவுகள்
நான் பேச நினைப்பதெல்லாம்

சுட்டி(url) :
http://www.arul76.blogspot.com/
http://whatiwanttosayis.blogspot.com/

ஊர்: சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: குழலி

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 06th may 2005

இது எத்தனையாவது பதிவு: 23

இப்பதிவின் சுட்டி(url): http://whatiwanttosayis.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
பகிர்தலில்/எழுத்தில் உள்ள ஆர்வம். முழுநேர பணியாக செய்ய இயலவில்லை. கல்லூரி காலங்களில் மாணவர்கள் இதழ் நடத்திக்கொண்டிருந்தோம். இப்போது அந்த ஆர்வத்திற்கு வலைபூவே வடிகால்.

சந்தித்த அனுபவங்கள்:
இவ்வளவு பேர் மற்ற துறையில் இருந்தும் எழுத்தில் இப்படி அசத்துகிறார்களே என்ற ஆச்சர்யம்தான் அடிக்கடி. சில நல்ல விவாதங்கள் தந்த புரிதல்கள்.

பெற்ற நண்பர்கள்:
தங்களுக்கென்று வலைப்பூ இல்லவிட்டலும், என் பதிவுகளைப் படித்து email மூலம் நட்பானவர்களையும் சேர்த்து நிரைய.

கற்றவை:
இன்னும் நிரைய கற்க வேண்டுமென்று.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: இதுவரை எந்த கட்டுப்படுகளையும் உணரவில்லை.

இனி செய்ய நினைப்பவை:
வலைப்பதிவுகளை படிக்கவும் எழுதவும் இன்னும் அதிக நேரம் ஒதுக்கவேண்டும். நிறைய நிறைய நிறைய.. எழுதவேண்டும். எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு திரைக்கதையாவது எழுதவேண்டும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
மென்பொருள் உருவாக்கும் தொழிலில் இருக்கிறேன். வேறென்ன... வாழ்வின் அந்தந்த நிமிடங்களை ரசிக்கிற ரசிகன். கோபம் முதற்கொண்டு எனது எல்லா உணர்வுகளையும் மதிக்கிறவன். எந்த பிரச்சனையிலும் எதிராளியின் சூழலில் என்னை வைத்து பார்க்கிறவன்.

இன்னும் நான் சொல்ல நினைக்கும் ஒன்று:
வாழ்க்கை ஒருமுறைதான். இன்னொரு பிறவியில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பினும், இந்த பிறவியின் எந்த தொடர்பும் அப்போது இருக்கப்போவதில்லை எனும்போது அது ஒரு தனிப்பிறவிதான். எனவே இப்போது கிடைத்திருக்கும் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து தீர்த்துவிடுங்கள்!

3 comments:

மதுமிதா said...

நன்றி அருள்குமார்

பொன்ஸ்~~Poorna said...

//வாழ்வின் அந்தந்த நிமிடங்களை ரசிக்கிற ரசிகன். கோபம் முதற்கொண்டு எனது எல்லா உணர்வுகளையும் மதிக்கிறவன். எந்த பிரச்சனையிலும் எதிராளியின் சூழலில் என்னை வைத்து பார்க்கிறவன்.
//
//கிட்டத்தட்ட நானும் உங்கள மாதிரி charecter தான் :(
//
I can relate this only now :)

அருள் குமார் said...

:)