Wednesday, March 29, 2006

ரகசிய சிக்னல்

மிழ்நாட்டு மக்களின்(என்னையும் சேர்த்துதான்!) அனுசரித்துப்போகும் மனோபாவம் மிக அலாதியானது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் கீழே இருக்கும் படம்.


(cell phone-ல் எடுத்த படம். எடுத்தபோது சூரியஒளி வேறு எதிர்ப்பக்கமிருந்து...! சரியாய் தெரியலன்னாலும் கொஞ்சம் adjust பண்ணி பாத்துப்பீங்கன்னு நம்பறேன்:) )

சென்னை 100 அடி சாலையில் MMDA நிறுத்தத்திலிருந்து வடபழனி செல்லும் வழியில், MMDA சிக்னலுக்கு அடுத்து வரும் சிக்னல் இது. பல மாதங்களாகவே இந்த சிக்னல், ஒரு மின்விளக்கு கம்பத்தின் பின் ஒளிந்துகொண்டு, நம்ம கிராமத்து காதலிகள் காதலன்களுக்கு கொடுக்கும் ரகசிய சிக்னல் போலத்தான் சிக்னல் கொடுத்துக்கொண்டிருக்கிறது!

சில கோணங்களில் 'நில், கவனி, செல்' இந்த மூன்றும் சுத்தமாக தெரிவதில்லை. seconds coundown-ல் கூட ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு இலக்கங்கள்தான் தெரியும். 110 வினாடிகள் இருக்கையில் 10 வினடிகள் தான் இருப்பதாய் அடித்து பிடித்துக்கொண்டு, முழு திறமையையும் பயன்படுத்தி வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களை பார்க்கையில் வேடிக்கையாய் இருக்கும். நிரைய விபரீதங்கள் நிகழ வாய்ப்பிருந்தும் யாரும் அதை கண்டுகொள்வதாய் தெரியவில்லை. (தினசரி இரண்டு முறை அந்த சிக்னலை கடக்கும் என்னையும் சேர்த்துதான்!)

இதை யாரிடம் கேட்ப்பது? கேட்டால் நமக்கு என்ன பிரச்சனைகள் வரும்? அப்படியே கேட்டாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுமா? இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நமது நேரத்தை வீணாக்குவதை விட இதை adjust பண்ணி போவது மிக எளிதாகத்தானே இருக்கிறது! இவ்வளவையும் தினசரி பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருக்கும் போக்குவரத்து காவல்துறை காவலருக்கு இல்லாத கடமை நமக்கென்ன வந்தது? - இந்த எண்ணம் தான் நம்ம specialty! இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக பார்க்காமல்,
"மச்சி... அந்த சிக்னல பாரேன். நைசா ஒளிஞ்சிகிட்டு ரகசிய சிக்னல் கொடுக்குது..!" என்று ரசித்து சிரிக்கிற கலைரசனை உடையவர்கள் நாம்!

பல வருடங்களுக்கு பிறகு, சென்ற கோடையில், கனடாவிலிருந்து நம்ம ஊருக்கு வந்திருந்தார் என் நண்பனின் மாமா. அவர் கேட்ட சில கேள்விகளும், சொன்ன சில விஷயங்களும்:

"நம்ம ஊர்லதாம்ப்பா இப்படி எல்லா விஷயத்தையும் adjust பண்ணி போறோம். அத்தியாவசியமான தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து இதெல்லாமே தினசரி போராட்டமா இருந்தா எப்படிப்பா முன்னேற முடியும்? ரொம்ம்ம்ம்ப கஷ்டம்! கனடாவுலல்லாம் maintenence-க்காக power-cut பண்ணாகூட மூனு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க. இங்க என்னடான்னா ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை power-cut பண்றாங்க. அதும் எந்த அறிவிப்பும் இல்லாம! இதெல்லாம் தாம்ப்பா ஒரு நாட்டோட முன்னேற்றத்தை தடுக்கிற விஷயங்கள். நீயே யோசிச்சு பாரு... தண்ணிக்காக ராத்திரி ஒரு மணிக்கும், ரெண்டு மணிக்கும் தூங்காம தண்ணி லாரிக்கு காத்திருந்து, அதையும் சண்ட போட்டு போராடி வாங்கறவன் அடுத்த நாள் office போயி(பஸ் பிடிச்சி போறது ஒரு தனி போராட்டம்!) அவன் வேலைய சரியா செய்யமுடியுமா? அப்புறம் productivity எப்படி இருக்கும்?! காலைல எழுந்து பைப் திறந்தா தண்ணி நம்ம வீட்டுக்குள்ள வரணும். இது நமக்கு நம்ம அரசாங்கம் தரவேண்டிய அடிப்படை வசதி. தரவேண்டியது அவங்க கடமை. அதுக்குதான வரி கட்டறோம்!"

தினசரி வாழ்வின் அத்தியாவசியங்களை குடிமக்களுக்கு வழங்குவது ஒரு அரசின் கடமை என்பதையே மறந்துவிட்டு, அரசு விதிக்கும் வரிகளையும் செலுத்தி, எல்லா பிரச்சனைகளையும் தாங்களே சமாலிக்கும் நம் மக்கள் - நமது அரசியல்வாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தானே!

நாம் வாக்களித்து பதவியில் அமரச்செய்தவர்கள் நமக்கே செய்யும் அக்கிரமங்களையே கண்டுகொள்ளாமல் adjust பண்ணிக்கொள்கிற நமக்கு இந்த சிக்னல் பிரச்சனையெல்லாம் ஒரு விஷயமா என்றுதானே சிரிக்கிறீர்கள்.

அதுவும் சரிதான் :(

9 comments:

சீனு said...

அருள்,

நன்றி. நானும் சில நேரம் அந்த பாதையில் சென்றிருக்கிறேன். பட்டும் இருக்கிறேன். ஆனால், இதை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி.

http://darpg-grievance.nic.in/ என்னும் உரலுக்கு சென்று நாம் நம்முடைய பிரச்சினைகளை இடலாம். அனைவரும் இதை உபயோகிக்கலாம்.

சீனு.

dondu(#11168674346665545885) said...

அருள் குமார் அவர்களே,

சென்னை டிராஃபிக் போலீஸ் கமிஷனருக்கு நீங்கள் எடுத்தப் புகைபடத்தை இணைத்துக் கடிதம் எழுதவும். இது மாதிரி புகார்களை கடிதமாக எழுதுவது பற்றி நான் இரண்டு பதிவுகள் போட்டுள்ளேன். அவற்றில் முதல் பதிவில் இம்மாதிரி எழுதியுள்ளேன்.

"நாம் எழுதுவதால் என்ன நடந்துவிடப் போகிறது என்னும் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.
5. சில சமயங்களில் பொதுவாகவும் எழுத வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு பம்பாயில் வி.டி.ஸ்டேஷன் எதிரில் காபிடல் என்னும் சினிமா தியேட்டர் இருந்தது. அதன் அருகில் வண்டிகளுக்கு இடது பக்கம் திரும்பும் சிக்னல் பச்சை நிறத்தில் இருக்கும்போது தெரு நடுவில் உள்ள பாதசாரிகள் சிக்னலும் பச்சை நிறத்தில் வந்தது. இதை பற்றி நான் போக்குவரத்துக்கு பொறுப்பான போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதுகையில் இடத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டு அவரே நான் சொன்னதை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன். இரண்டே நாட்களில் பதில் வந்தது. அந்தத் திருப்பத்தில் இடது பக்கம் திரும்புவதையே ரத்து செய்திருந்தனர். அதுதான் நானும் வேண்டியது. இந்த இடத்தில் புகார் தெளிவாக இருப்பது முக்கியம்."

பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post.html
இதன் இரண்டாம் பாகத்துக்குப் பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/2.html

இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட ஏதுவாக அதன் நிகலை நான் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருள் குமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. அதன் நகலை இங்கே இட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நகல் எடுக்கும் முன்னாலேயே பப்ளிஷ் பட்டனை அழுத்தி விட்டேன்.

பார்க்க: http://whatiwanttosayis.blogspot.com/2006/03/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/2.html#comments

அருள் குமார் said...

@ சீனு:
வாருங்கள் சீனு.
//பட்டும் இருக்கிறேன்// - ஒன்றும் பெரியதாக இல்லையே. இதற்குத்தான் எப்போதுமே சிக்னலை மதிக்காமல் சிலர் செல்கிறார்கள் போல. அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைதானே!

உண்மையில் நல்ல தகவல் அளித்திருக்கிறீர்கள். முதன் முதலாய் என் பங்கிற்கு இந்த விஷயத்தை அதில் பதிவு செய்கிறேன். என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்!

@ உண்மை:
ஆமாம் உண்மை, எதையும் கேட்கும் முன்னே அது நம்மை பாதிக்காத வகையில் எப்படி கேட்ப்பது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கேட்கவேண்டும் என முடிவு செய்துவிட்டால் எப்படியாவது கேட்டுவிடலாம் :)

//சுற்றிலும் இருப்பவர்கள் நம்மை ஒரு ஜந்து போல் பார்ப்பார்கள் பாருங்கள்...// - அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள் உண்மை.

அருள் குமார் said...

//நாம் எழுதுவதால் என்ன நடந்துவிடப் போகிறது என்னும் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்// - மிகச்சரியாய் சொன்னீர்கள் mr. dondu.

இனி அப்படிச் செய்வதை வழக்கமாக்கிக் கொள்கிறேன். நம்மால் முடிந்த சிலவற்றையாவது செய்யவேண்டுமல்லவா.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நண்றி.

dondu(#11168674346665545885) said...

"இனி அப்படிச் செய்வதை வழக்கமாக்கிக் கொள்கிறேன். நம்மால் முடிந்த சிலவற்றையாவது செய்யவேண்டுமல்லவா."

இதற்கு என்று நல்ல நாளா பார்ப்பது? எப்போதோ என்ன இப்போதே செய்யவும் என்று உங்களிடம் கூற என் என் உள்ளம்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் எனக்கு ஆணையிட்டு விட்டான்.

முன்வரைவுக் கடிதம் இதோ:

To,
The Commissioner of Police (Traffic),
Chennai Cioty Police,
Egmore.

Sir,

Sub: Dangerous situation prevailing in .......(fill up the place, with clear location indication)

There is an accident waiting to happen as can be seen from the photo enclosed with this letter, which is self explanatory.

You need not take my word at face value. Kindly have this independently confirmed by deputing a responsible official to the site. I request immediate remedial action on your part.

Encl: One photo
Thanking you,
Yours faithfully,
(Your signature)
CC:
1. Ms. Jayalalitha Jayaram, Hon. Chief Minister, Tamil Nadu, Fort St.George, Chennai
2. His Excellency The Governor, Tamil Nadu, Raj Bhavan, Guindy, Chennai - 32.

பின் குறிப்பு:
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட ஏதுவாக அதன் நிகலை நான் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் குமார் said...

இந்த முன்வரைவுக் கடிதத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை Mr. Dondu!

உங்கள் வேகம் என்னை வெட்கப்பட வைக்கிறது.

உடனே அந்த photo-வை print போட்டு, கடிதத்துடன் இணைத்து அணுப்புகிறேன்.

மிக்க நன்றி!

கவிதா | Kavitha said...

சீனு சொன்னதை செய்து பார்க்கலாம். நேரம் ஒதுக்கி புகைபடம் எடுத்து பதிந்ததற்கு நன்றி.

அருள் குமார் said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிதா.