Tuesday, December 20, 2005

கனாக்கண்டேன்!

எப்பவுமே எனக்கு தூக்கத்தில் நிறைய கனவு வரும். நல்ல கனவோ கெட்ட கனவோ... almost daily எனக்கு கனவு வரும். தூங்கறப்போ கூட ஒரு life, ஒரு feel கிடைக்கறதால(என்னதான் கனவுன்னாலும் அந்த நிமிஷம் அது தர்ற feel 100% நிஜம் தானே) அந்த எல்லா கனவுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆமாம், கெட்ட கனவுகூடத்தான் பிடிக்கும். சொல்லப்போனா கெட்ட கனவுதான் ரொம்ப பிடிக்கும்! ஏன்னா...

நிஜத்துல நமக்கு என்ன கெட்டது நடந்தாலும் அதோட பாதிப்பு நம்மள continue பண்ணும். ஆனா கனவுல நாம படற கஷ்டம் அந்த கனவு முடியற வரைக்கும் தான! அந்த கஷ்டம் எப்படி இருக்கும்னு நமக்கு நல்லா புரிஞ்சிடுது. அத 100% அனுபவிக்கறோம். ஆனா கனவு கலைஞ்சு எழுந்தா, அப்பாடா இது வெறும் கனவுதான்னு ஒரு பெறிய relief கிடைக்கும்.

அப்படி recent-ஆ நான் கண்ட ஒரு கனவுல நான் செத்துப்போய்ட்டேன்! செம interesting-ஆன கனவு அது. அந்த கனவு...

நானும் என் friend வீரமணியும்(அவன் ஒரு asst. director) bike-ல எங்கயோ பொய்கிட்டிருக்கோம். நாந்தான் வண்டி ஓட்டறேன். செம fast. 'கனவுல கூட நெனச்சு பாக்க முடியாத வேகம்' னு சொல்வாங்கல்ல, அப்படி ஒரு வேகம். வீரமணி கைல machine gun வேற! ரெண்டு பேரும் செம jolly mood-ல ஏதேதோ கத்திகிட்டும், சிரிச்சிகிட்டும் போறோம். அவன் அப்பப்போ 'டட் டட்.. டடடடடடடட்...டடடட்..ட்' னு சுட்டுகிட்டே வர்றான்.

அந்த ரோடு செம straight-ஆ ரொம்ப தூரத்துக்கு போகுது... நம்ம beach road மாதிரி. திடீர்னு பாத்தா, எதிர்ல கொஞ்ச தூரத்துல கார்லாம் line-ஆ வருது. அதுல நிறைய gun எல்லாம் வச்சிகிட்டு commandos-லாம் side-ல தொங்கிகிட்டு வராங்க. எனக்கு புரிஞ்சிடுச்சி..! வர்ரது நம்ம CM தான்! டக்குன்னு ஒரு பயம். இவன்வேற நம்ம பின்னாடி உக்காந்து இப்படி சுட்டுகிட்டு வர்றானே... அவங்க என்னவோ CM-ம தான் நாம சுட வர்றோம்னு நினைச்சிட்டா..! அவ்ளோதான். கண்டிப்பா நாம காலி. இவன் வேற அவங்க வர்றத கவனிக்காம சுட்டுகிட்டே வர்றான். பயத்துல நடுமுதுகுல சில்லுன்னு ஒரு feel.

"டேய்... நிறுத்துடா. சுடாதடா..." னு கத்தறேன்.

"போடா... நான் எவனா இருந்தாலும் சுடுவேன்... எவனா இருந்தாலும் சுடுவேன்..." னு கத்திகிட்டே சுடறான் அவன்.

அதுக்குள்ள அவங்க நாங்க சுட்டுகிட்டே வர்றத பாத்து க்க்க்க்ரீச்ச்... க்க்க்க்ரீச்ச் னு brake போட்டு ஒவ்வொரு காரா நிருத்தறாங்க.கடைசில நான் பயந்த மாதிரியே ஆய்டுச்சி. நாங்க CM-மதான் சுடவர்றோம்னு தப்பா நினைச்சி commandos-லாம் கீழ குதிச்சி எங்கள பாத்து சுட ஆரம்பிச்சிட்டாங்க.நாங்க CM-ம சுட வரல, சும்மா jolly-யா விளையாடிகிட்டுதான் வர்றோம்னு எப்படியாச்சும் அவங்களுக்கு புரிய வைக்கனும்னு மனசு தவிக்குது. அதெல்லாம் வேலைக்கே ஆவாது... வுடு ஜீட்-னு அறிவு சொல்லுது. சரின்னு நானும் break போட்டு வண்டிய ஒரு U-Turn போட்டு esc ஆகலாம்னு try பண்றேன்.

வந்த வேகத்துக்கு break போட்ட உடனே வண்டி ஒரு பக்கமா road-ல சரசரசர-னு slow-motion-ல இழுத்துகிட்டு போகுது. அவங்க சுட்ட bullets-லாம் slow-motion-ல inch inch-ஆ என்ன target பண்ணி வருது. அலை அலையா வர்ற bullets-அ avoid பண்றதுக்கு நான் என் தலைய அப்படியும் இப்படியுமா திருப்பறேன். ஆனாலும் கிட்ட கிட்ட வந்துகிட்டிருந்த ரெண்டு bullets-ல ஒண்ண avoid பண்ண தலைய திருப்பினப்பவே தெரிஞ்சிடுச்சி, பக்கத்துலயே வர்ற இன்னோரு bullet கண்டிப்பா என் கழுத்துக்குதான்னு. "ஐய்யோ... இப்படி அநியாயமா மாட்டிகிட்டோமே..."-ன்னு நெஞ்சு அடைக்கும்போதே அந்த bullet என் கழுத்துல பாயுது!(FYI: 'ஆயுத எழுத்து' படம் சத்யம்ல நாலுவாட்டி பாத்தேன்!) அந்த சில நொடி நேரத்துல என்னல்லாமோ மனசுல வந்துட்டு போச்சி. அதுல ஒன்னு... "ஐயோ... நம்மள மாட்டிவிட்ட வீரமணி மட்டும் esc ஆய்ட்டானே...!"

அப்புறம் நடந்ததெல்லாம் என்னால தாங்கிக்கவே முடில. என் body-ய சுத்தி எல்லோரும் கதறி அழறாங்க. என்னோட ஆசையெல்லாம் சொல்லி அதையெல்லாம் அனுபவிக்காமலே போய்ட்டானேன்னு அழறாங்க. என்ன பாத்து எனக்கே அடக்க முடியாம அழுகையா வருது. இப்படி சின்ன வயசுலயே செத்துட்டமேன்னு மனசு தவிக்குது. என்னல்லமோ பண்ணனும்னு நினைச்சமே, இவ்ளோதானா என் life. எல்லாமே முடிஞ்சி போச்சே-னு ஆதங்கம். இந்த life மேல எவ்வ்வ்வ்வ்வ்ளோ ஆசை வச்சிருந்தேன். அதெல்லாம் waste. இனிமே நான் இல்லைங்கறத மனசு accept பண்ணவே மாட்டேங்குது. அந்த மன அழுத்தம் தாங்கவே முடியாம சட்டுன்னு எழுந்துட்டேன்.

உடம்பெல்லாம் வேர்த்து, நெஞ்சு செம fast-ல அடிச்சிகிட்டிருந்துது. கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே புரியல. மெதுவா bed-அ விட்டு இறங்கி தண்ணி குடிச்சிட்டு திரும்பவும் வந்து படுத்தா, தூக்கமே வரல. time வேற நாலேகால். ஐயோ! அதிகாலைல கனவு கண்டா வேற பலிக்குமாமே! என்னமோ போ-னு நெனச்சிகிட்டேன். ரொம்ப நேரம் ஏதேதோ யோசனை. life நிலையே இல்லாத ஒண்ணுன்னு நல்லா புரிஞ்சுது. இருக்கற வரைக்கும் சந்தோஷமா இருக்கனும். முடிஞ்ச வரைக்கும் நம்மல சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வச்சிக்கணும்னு நினைச்சிகிட்டேன்.

அடுத்தநாள் friends கிட்டல்லாம் சொல்லிகிட்டு இருந்தேன் - இந்த கனவ பத்தி. எல்லரும் சிரிக்கறானுங்க.

"அதுக்குத்தான் சினிமா காரன(வீரமணி) நம்பாதென்னு சொன்னேன்... நீ கேக்காம போய்ட்ட மச்சி.."

"பெரிய புடுங்கி அவுரு! எவனா இருந்தாலும் சுடுவாறாம்."

"அதென்னடா, அவன் எடுக்கப்போற first படத்தோட title-ஆ..."

-இப்படி ஒரே comments.

ஒருத்தன் கிட்ட சொன்னப்போ மட்டும் ரொம்ப serious ஆய்ட்டான். step by step-ஆ பொறுமையா கேட்டுகிட்டே வந்தான். என் body-ய நானே பாத்தேன்னு சொன்னப்போ செம tension-ஆய்ட்டான். அப்புறம் அப்புறம் என்ன feel பண்ண-னு கேட்டுகிட்டே வந்தான். நான் இப்படி அல்பாயுசுல போய்ட்டனேன்னு எப்படில்லாம் feel பண்ணேனோ அதெல்லாம் ரொம்ப explain பண்ணி சொல்லிகிட்டே வந்தேன். அவன் இன்னும் எதயோ எதிர்பாத்து அப்புறம் வேற என்ன feel பண்ணன்னு கேட்டுகிட்டே இருந்தான். எனக்கு ஒண்ணும் புரியயல. அந்த tension-லயே எழுந்துட்டேன்டான்னு சொன்னேன். "ஹைய்யோ... வேற ஒண்ணும் தோனலையா உனக்கு..." னு ஆதங்கத்தோட கேட்டான். இல்லடான்னேன்.

"ச்ச... miss பண்ணிட்டடா....! நல்லா miss பண்ணிட்ட...!!" -ன்னான்.

ஒண்ணும் புரியாம "என்னடா miss பண்ணிட்டேன்.." னு கேட்டேன்.

"உன் dead body ய நீயே பாத்து feel பண்றேன்னு சொன்னல்ல... நீ செத்துப்போனப்புறம் உன் body பாத்து feel பண்ற 'இது' யாருன்னு உனக்கு ஒரு கேள்வி வந்திருக்கனும். அத மட்டும் யோசிச்சிருந்தின்னா 'நீ' யாருன்னு உனக்கு புரிஞ்சிருக்கும்!" -ன்னான்.

ஆஹா... அவனா நீ..! இதுக்குத்தான்டா ஆன்மீகத்துல interest இருக்கவன்கிட்டல்லாம் இதுமாதிறி கனவ பத்தில்லாம் பெசக்கூடாதுன்னு நினைச்சிகிட்டு silent-ஆ esc ஆயிட்டேன்!

7 comments:

சத்தியா said...

ஆஹா!... சூப்பர் கனவுதான்.

நாமக்கல் சிபி said...

இதே நிலையாமையை மையமா வெச்சி நானும் "ஆட்டோகிராஃப்"னு ஒரு கவிதை எழுதியிருக்கேன்.

அது உடலுக்கு உயிர் எழுதுவது மாதிரி இருக்கும்.

படிச்சி பார்த்துட்டு நல்லா இருந்தா தெரியப்படுத்துங்க.

என்னோட பதிவோட பேரு "மனமும் நினைவும்"

யுஆரெல் : "manamumninavum.blogspot.com"

அருள் குமார் said...

ஆமாம் சிபி. நீங்க சொல்லியிருக்கறதும் இது போலத்தான்.

//பிரிந்த பின்னர் என்ன செய்வோம்?
நான் காற்றோடு காற்றாக பேயாய்!
நீ மண்ணோடு மண்ணாக பிணாமாய்! - ஆக
ஐம்பூதங்களுள்
ஆளுக்கொன்றாய் நாம்!//

-இந்த வரிகளை ரசித்தேன்.

//இவ்வுலகில் நாம் உதிர்க்கப்பட்டபோது
இப்பிரபஞ்சத்தில் பிறக்கும்போது
ஒன்றாய்த்தானே பிறந்தோம்!//

-உடலும் ஆன்மாவும் ஒன்றாய் பிறப்பதில்லை, ஒரு உடலை விட்டு நீங்கிய ஆன்மா வேறொரு உடலை அடைகிறது என்றுதான் சொல்கிறார்கள்!

குழலி / Kuzhali said...

//"அதுக்குத்தான் சினிமா காரன(வீரமணி) நம்பாதென்னு சொன்னேன்... நீ கேக்காம போய்ட்ட மச்சி.."

"பெரிய புடுங்கி அவுரு! எவனா இருந்தாலும் சுடுவாறாம்."

"அதென்னடா, அவன் எடுக்கப்போற first படத்தோட title-ஆ..."

-இப்படி ஒரே comments.
//
வீரமணியை விசாரித்ததாக சொல்லவும்...

//ஆஹா... அவனா நீ..! இதுக்குத்தான்டா ஆன்மீகத்துல interest இருக்கவன்கிட்டல்லாம் இதுமாதிறி கனவ பத்தில்லாம் பெசக்கூடாதுன்னு நினைச்சிகிட்டு silent-ஆ esc ஆயிட்டேன்!
//
யாரிது? எனக்கும் தெரிஞ்சிக்கிட்டா நல்லது தானே...

அருள் குமார் said...

hi da!

//வீரமணியை விசாரித்ததாக சொல்லவும்...//
சொன்னேன். உன் marriage-கு வர முடிலன்னு வருத்தப்பட்டான். sir இப்போ producer பாக்க ஆரம்பிச்சிட்டார். எப்படியும் இந்த வருடம் இயக்குனர் ஆகிவிடுவான்.

//யாரிது? எனக்கும் தெரிஞ்சிக்கிட்டா நல்லது தானே... //
கண்டிப்பா. next time நீ இந்தியா வரப்போ அறிமுகப்படுத்தறேன். ஆனா அப்புறம் என்ன திட்டக்கூடாது.

சிங். செயகுமார். said...

எனக்கு தெரிஞ்சி போச்சு யார் அந்த ஆசாமின்ன்னு!

அருள் குமார் said...

என்னங்க ஜெயகுமார், குழப்பறீங்க?! உங்களுக்கு எப்படி தெரியும்?!!!!