நான் பேச நினைப்பதெல்லாம்

நம் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் என்னைப் பாதிக்கையில், நான் சொல்ல நினைப்பவை இவை...

ATM கொள்ளையைத் தடுக்க...

ரவு நேரங்களில் வெளியில் செல்லும்போது, நமது ATM card -ஐ உபயோகித்து பணம் எடுத்துத்தரச் சொல்லி கத்தி முனையில் மிரட்டும் கும்பல்கள் பற்றி கொஞ்ச நாளுக்கு முன் பொன்ஸ் ஒரு பதிவிட்டிருந்தார்.

இன்றைக்கு மின்மடலில் வந்த செய்தி ஒன்று இவற்றைத் தடுக்க மிக உபயோகமானதாய் இருக்கும் எனப்படுகிறது.

இப்படி யாரும் நம்மை மிரட்டினால், நாம் ATM -ல் நமது card-ஐ போட்டு, நமது PIN நம்பரை தலைகீழாய்க் கொடுத்தால் அந்த இயந்திரமே போலீசுக்கு தகவல் கொடுத்துவிடுமாம். உதாரணத்திற்கு நமது PIN நம்பர் 1234 எனில் நாம் 4321 என கொடுக்கவேண்டும். அப்படிக்கொடுத்தாலும் இயந்திரம் பணம் வழங்கிவிடும். அத்துடன் போலீசுக்கு தகவலும் சொல்லிவிருகிறது என்கிறது அந்த மின்மடல். இதனால் திருடர்களுக்கு சந்தேகம் வர வழியில்லாததுடன், எந்த ஏரியா ATM என்பது முதல் போலீசுக்கு தகவல் போய்விடுவதால், உடனடியாக அவர்கள் வந்து காப்பாற்ற ஏதுவாகிறது என்கிறார்கள்.

'இத்தகவல் உண்மையா எனத்தெரியவில்லை' என்று சொல்லி ஆரம்பிக்கும் அந்த மடல் சொல்லும் விஷயம் உண்மையா எனத்தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஆனால் இதுவரை அப்படி இல்லாவிட்டாலும் இனி இந்த யோசனையை வங்கிகள் கையாண்டால் நல்ல பயன் இருக்கும் என்றே நினைக்கிறேன். குறைந்தபட்சம், இப்படி ஒரு விஷயம் இருக்கிறது எனத்தெரிந்தால் திருடர்கள் இப்படிச் செய்ய பயப்படலாம்.

பிற்சேர்க்கை: பல செய்திகளை ஆராய்ந்ததில் இது எங்கும் இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று அறியப்படுகிறது.

17 மறுமொழிகள்:

செந்தழல் ரவி Thu Nov 23, 02:23:00 AM  

தலை, நீங்கள் ஒரு எப்படி பதிவோடு ஆட்டத்தை முடித்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

♠ யெஸ்.பாலபாரதி ♠ Thu Nov 23, 02:23:00 AM  

அது சரி.. எல்லாத்தையும் சொல்லீட்டு.., கடைசில இப்படி
//'இத்தகவல் உண்மையா எனத்தெரியவில்லை' // சொன்னா எப்படி தல..?,
திட்டம் நல்லாத்தான் இருக்கு.

எதுக்கும் பக்கத்துல இருக்குற பேங்க் மேனேஜர் கிட்ட கேட்டுப்பார்க்கனும்.

S. அருள் குமார் Thu Nov 23, 02:25:00 AM  

பொன்ஸ்,
இந்த சோதனை முயற்சியெல்லாம் உங்களுக்குத்தான் சரியா வரும். ஒருவட்டி டெஸ்ட் பண்ணி சொல்லிட்டீங்கன்னா எல்லாருக்கும் யூஸ் ஆகும்ல...

உங்கள் நண்பன் Thu Nov 23, 02:28:00 AM  

திரு அருள் அவர்களே !
ஒரு நல்ல விசயத்தை பதிவிட்டமைக்கு நன்றி!
ஆனால் அது உண்மையா என்று எப்படி சோதித்துப் பார்ப்பது? நாமே ஒரிடத்தில் இது போல் செய்யும் பட்சத்தில் போலிஸ் நம்மிடம் வந்து விசாரிக்க மாட்டார்களா? யாரவது சோதித்திருந்தால் சொல்லவும்.

//ஆனால் இதுவரை அப்படி இல்லாவிட்டாலும் இனி இந்த யோசனையை வங்கிகள் கையாண்டால் நல்ல பயன் இருக்கும் என்றே நினைக்கிறேன். குறைந்தபட்சம், இப்படி ஒரு விஷயம் இருக்கிறது எனத்தெரிந்தால் திருடர்கள் இப்படிச் செய்ய பயப்படலாம்//

செயல்படுத்தக் கூடிய ஒரு நல்ல கருத்து!


அன்புடன்...
சரவணன்.

பொன்ஸ்~~Poorna Thu Nov 23, 02:36:00 AM  

அடப் பாவிங்களா!!

அருள், உங்க கார்டைக் கொடுங்க, நல்ல்ல்லா சோதிச்சி சொல்றேன்.. ;)

குறள் Thu Nov 23, 02:37:00 AM  

என்னோட ஏடிஎம் பின் 4004.
இப்ப மிஷின் என்ன பண்ணும்??
:))

S. அருள் குமார் Thu Nov 23, 02:42:00 AM  

//தலை, நீங்கள் ஒரு எப்படி பதிவோடு ஆட்டத்தை முடித்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... //

ரவி,

//பொன்ஸ்,
இந்த சோதனை முயற்சியெல்லாம் உங்களுக்குத்தான் சரியா வரும். ஒருவட்டி டெஸ்ட் பண்ணி சொல்லிட்டீங்கன்னா எல்லாருக்கும் யூஸ் ஆகும்ல... //
:)

தல,
//எதுக்கும் பக்கத்துல இருக்குற பேங்க் மேனேஜர் கிட்ட கேட்டுப்பார்க்கனும்.//
அப்படியே குறள் கெட்ட கேள்விக்கும் சேத்து கேளுங்க. ப்ளீஸ்.

S. அருள் குமார் Thu Nov 23, 02:44:00 AM  

குறள்,
நியாயமான கேள்விதான்.

இந்த சர்வீஸ் வேணும்னா நீங்க உங்க PIN நம்பரை மாத்திக்க வேண்டியதுதான். அது அவ்வளவு கஷ்டமா என்ன?

செந்தில் குமரன் Thu Nov 23, 02:46:00 AM  

http://www.msnbc.msn.com/id/4086277/

S. அருள் குமார் Thu Nov 23, 02:46:00 AM  

நண்பர்களே, உடனே 'PIN நம்பரை மாத்துவது எப்படின்னு' யாராச்சும் பதிவு போட்டுடாதீங்க ;)

லதா Thu Nov 23, 03:03:00 AM  

// என்னோட ஏடிஎம் பின் 4004.
இப்ப மிஷின் என்ன பண்ணும்?? //

The page cannot be found ATM 4004 என்று பல்லிளிக்கும் :-))

S. அருள் குமார் Thu Nov 23, 03:07:00 AM  

உபயோகமான தகவலைத் தேடித்தந்தமைக்கு நன்றி செந்தில் குமரன்.

Anonymous Thu Nov 23, 07:10:00 AM  

Though the technology is existing, it has not been implemented anywhere n the world. If you want to validate these mails you can search in google and in 2 mins you can understand.Many websites are having relevent details.Please don t popularize these unreliable mails. Thanks

S. அருள் குமார் Thu Nov 23, 10:33:00 AM  

உங்கள் தகவலுக்கு நன்றி அனானி. நீங்கள் சொன்ன விஷயத்தை நானும் சோதித்து அறிந்தேன்.

பதிவிலும் இந்த விஷயத்தை சேர்த்துவிட்டேன்.

துளசி கோபால் Thu Nov 23, 03:39:00 PM  

PIN நம்பரை ஒரு குறிப்பிட்ட பெட்ரோல் பங்குலே போய் மாத்துங்கன்னு பேங்லே சொன்னாங்க.
அதான் புரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்(-:

G.Ragavan Fri Nov 24, 10:41:00 AM  

அருள், இந்தப் பதிவில் சொல்லியிருப்பது உண்மையல்ல. அது உறுதி செய்யப்பட்டு விட்டது. நேற்று இது எனக்கும் மெயிலில் வந்தது. அதை வைத்துக் கொண்டு விசாரணையில் தோழி ஒருத்தி இறங்கிய பொழுது கிடைத்தத தகவல் அது. ஆனால் மிகவும் நல்ல திட்டம்.

ILA(a)இளா Sat Nov 25, 02:13:00 AM  

http://binarywaves.blogspot.com/2006/11/atm-robbers.html
இதையும் பார்த்துருங்க. ஆனா இது உண்மை இல்லீங்களாம். விசாரிச்சதுல தெரிய வந்தது. பெங்களூர்காரங்க எல்லாம் அப்பாடா அப்படின்னு நினைச்சோம் இந்த மெயில் பார்த்தவுடனே.

About this blog

"வாழ்வின் லட்சியம் வாழ்ந்து தீர்ப்பதே!" - சொன்னது நாந்தாங்க!

Blog Archive